பாலக்காடு, கேரள மாநிலம், அட்டப்பாடியில் இயற்கை முறையில் விளைவித்த காபிக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அட்டப்பாடியில், பழங்குடியினர் நலத் துறையின் கீழ், பழங்குடியின மக்களின் நலனுக்காக, எஸ்.சி. எப்.எஸ்., என்ற பெயரில் கூட்டுறவு குழு செயல்படுகிறது. இதில், 400 மலைவாழ் மக்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்களை பங்குதாரர்களாக கொண்டு, மாவட்ட கலெக்டரை தலைவராக கொண்டு, இந்த குழு செயல்படுகிறது. இக்குழு இயற்கை முறையில் உற்பத்தி செய்யும் காபிக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரில் சமீபத்தில் நடந்த உலக காபி மாநாட்டில், அட்டப்பாடி மலைவாழ் மக்கள் குழுவின் தயாரிப்பான, ‘ரோபஸ்டா’ காபி, தேசிய அளவில் முதல் ஐந்து இடத்தில் இடம் பிடித்துள்ளது. இதற்கான விருது மண்டல அளவிலான விழாவில் வழங்கப்படும்.
இதுகுறித்து, குழுவின் செயலர் ராஜேஷ்குமார் கூறியதாவது:
கூட்டுறவு குழுவின் கீழ், சிண்டக்கி, கருவார, போத்துப்பாடி, குறுக்கன்குண்டில் ஆகிய பகுதிகளில் உள்ள தோட்டங்களில் ‘ரோபஸ்டா’ ரக காபி உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நான்கு தோட்டங்களில், 1,092 ஹெக்டேர் நிலம் உள்ளது. இங்கு பயிரிடப்பட்டுள்ள காபிக்கு, இயற்கையாகவே சுவை அதிகம்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement