1992 World Cup, South Africa: 1992ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா – நியூசிலாந்து நாடுகள் முதல்முறையாக உலகக் கோப்பை தொடரை நடத்தியது. ஆஸ்திரேலிய அணி நடப்பு சாம்பியனாக இந்த தொடரை எதிர்கொண்டது. அந்த தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகிய 9 அணிகள் இதில் மோதின. ஜிம்பாப்வே மட்டும் டெஸ்ட் அந்தஸ்து இல்லாத அணியாகும். அந்த தொடரில் நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு சென்றன.
உலகக் கோப்பையில் வந்த பெரும் மாற்றம்
இதில், இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதியதும், சாம்பியன் பட்டத்தை வென்றதும் தனிக்கதை. தென்னாப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டிதான் கிரிக்கெட் வரலாற்றில் மிக மிக மோசமான போட்டியாக மாறிவிட்டது. 1992ஆம் ஆண்டில் தான் ஒருநாள் கிரிக்கெட்டில் பல விஷயங்கள் மாறியிருந்தது. பகலிரவு ஆட்டங்கள், வெள்ளை பந்து, கலர் கலரான ஜெர்ஸிகள் என வண்ணமயமாக கிரிக்கெட் மாறியிருந்தது.
1992 உலகக் கோப்பையில் (1992 World Cup) தான் மழை பெய்தால் போட்டியை நடத்துவதற்கு புதிய விதி (Rain Rule) நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த விதி என்னவென்று இதில் பார்ப்போம், ஆனால் இந்த விதியும், ஒருநாள் வடிவ கிரிக்கெட் போட்டியை வணிகமயப்படுத்திய கெர்ரி பேக்கரின் (Kerry Packer) சேனல் 9 தொலைக்காட்சியின் பேராசையும் தான் தென்னாப்பிரிக்காவின் உலகக் கோப்பை கனவை காவு வாங்கியது என்பதை மறக்க முடியாது. டெஸ்ட் அந்தஸ்து பெற்றிருந்தாலும், தென்னாப்பிரிக்கா உலகக் கோப்பை தொடரில் 1992இல் தான் முதல்முறையாக விளையாடியது.
நிறவெறியும் தென்னாப்பிரிக்க அணியும்
தென்னாப்பிரிக்க அந்த உலகக் கோப்பையை பெரும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில்தான் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு வந்ததிருந்தது. அதாவது, அப்போது இருந்த நிறவெறி சட்டத்தை திரும்பப் பெற முடியவில்லை என்றால், தொடரின் பாதியிலேயே நாடு திரும்ப வேண்டிய கட்டாயமும் அந்த அணிக்கு அப்போது இருந்தது. அப்போது நிறவெறி சட்டங்களுக்கு (South Africa Apartheid) எதிராக போராடி வந்த நெல்சன் மண்டேலா சொன்ன அந்த ஒற்றை வார்த்தையால்தான் அந்த தொடருக்கு தென்னப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியாவுக்கே சென்றிருந்தது. அந்த அளவிற்கு நெல்சன் மண்டேலாவின் சொல்லுக்கு அத்தகைய வலிமை இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த அரசியல் நெருக்கடிகள் அனைத்தையும் தாண்டி, உலகக் கோப்பையில் தனது முதல் போட்டியிலேயே அப்போதைய நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அற்புதமான தொடக்கத்தை அமைத்தது, தென்னாப்பிரிக்கா, அதுமட்டுமின்றி, தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டு அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் தென்னாப்பிரிக்கா பந்துவீச்சை முடிவு செய்ததே பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்தது.
நேரம் குறைப்பு
இங்கிலாந்து பேட்டிங் செய்து 45 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்களை எடுத்திருந்தது. நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் தென்னாப்பிரிக்கா மெதுவாக பந்துவீசியது என்று கூறி, 45 ஓவர்களிலேயே முதல் இன்னிங்ஸ் முடித்துவைக்கப்பட்டது. அதன்மூலம், 45 ஓவர்களுக்கு 253 ரன்கள் எடுக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்கா நல்ல நிலையில் தான் இருந்தது. ஜாண்டி ரோட்ஸ் 43 ரன்களில் அவுட்டான போது தென்னாப்பிரிக்கா 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை எடுத்து நல்ல நிலையில் தான் இருந்தது. அதாவது, இந்த நேரம் குறைப்பு முழுக்க முழுக்க சேனல் 9 தொலைக்காட்சிக்காக செய்யப்பட்டது.
ஒரு கட்டத்தில் 30 பந்துகளுக்கு 47 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நல்ல நிலையில் தான் தென்னாப்பிரிக்கா இருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் 13 பந்துகளுக்கு 22 ரன்கள் எடுக்க வேண்டும் என கூறப்பட்டது. அப்போதும் கூட போட்டி தென்னாப்பிரிக்காவின் பக்கம் இருந்த நிலையில், அந்த Rain Rule மூலம் 1 பந்துகளில் 22 ரன்களை எடுக்க வேண்டும் என சொல்லப்பட்டது, இது தென்னாப்பிரிக்கா அணியை மட்டுமின்றி, போட்டியயை காண வந்த பார்வையாளர்கள் முதல் கிரிக்கெட் உலகத்தையே உலுக்கியது எனலாம்.
குழப்பம் தரும் Rain Rule
இந்த விதியின்படி முக்கியமாக, மழையால் நேரத்தை இழந்தால் ஓவர்கள் கழிக்கப்படும். மேலும் போட்டி விதிகளின் கீழ் அவை முதலில் பேட்டிங் செய்யும் பக்கத்திற்கு குறைந்த பலனைத் தரும். இங்கிலாந்தின் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா இரண்டு மெய்டன் ஓவர்களை வீசியது. அதாவது 2.1 ஓவர்கள் எஞ்சியிருந்தால் எந்த நேரத்திலும் தோல்வியடைந்தால் இலக்கைக் குறைக்க முடியாது, ஆனால் தென்னாப்பிரிக்கா ரன்களை எடுக்க குறைவான பந்துகளையே கொண்டிருந்தது.
மழை விரைவில் நின்றது மற்றும் இழந்த மொத்த நேரம் 12 நிமிடங்கள் ஆகும். இதனால் ஒரு ஓவர் கழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எனவே தென்னாப்பிரிக்காவின் புதிய இலக்கு ஏழு பந்துகளில் 22 ஆகும். இந்த செய்தி 35,000 கூட்டத்திற்கு சரியாகப் போகவில்லை, அவர்கள் ஆவேசமாக பதிலளித்தனர், கேலி செய்தனர் மற்றும் குப்பைகளை வெளிப்புறத்தில் வீசினர்.
ஆனால், அந்த உண்மை இன்னும் கசப்பானது. ஆறு பந்துகள் குறைக்கப்பட்ட அறிவிப்பு தவறானது. சேனல் 9 வர்ணனையாளர்களிடம் தென்னாப்பிரிக்காவின் மேலாளரான ஆலன் ஜோர்டான் இதைப் பற்றி கூறினார், மேலும் இது பார்வையாளர்கள் கூட்டத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அந்த குழப்படியான விதியால் தென்னாப்பிரிக்கா 22 ரன்களை 1 பந்தில் எடுக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டு, தென்னாப்பிரிக்காவின் கனவு தூள் தூளானது. இங்கிலாந்தும் இந்த கேலிக்கூத்தான விதியை ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் விதி அது தான் என கூறப்பட்டதால் அப்படி செய்ய வேண்டியதாகிவிட்டது என இங்கிலாந்து கேப்டன் கிரஹாம் கூச் தெரிவித்திருந்தார்.
ஒழிந்தது நிறவெறி சட்டங்கள்
அதன்பின்னரும், தென்னாப்பிரிக்கா இன்று வரை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதில்லை. அந்த Rain Rule விதி கைவிடப்பட்டது. 99இல் டக்-வொர்த் லீவிஸ் விதி கொண்டுவரப்பட்டது. இந்த Rain Rule மட்டுமின்றி, சேனல் 9-இன் டைம் லிமிடெஷனும் தான் தென்னாப்பிரிக்காவின் கனவை சிதைத்தது. ஒரு தனியார் தொலைக்காட்சியின் வருவாய் காரணமாக ஒரு நாடு தனது கனவை தொலைக்க வேண்டியதாகிவிட்டது. மேலும், தென்னாப்பிரிக்காவில் 1992ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் தேதி (உலகக் கோப்பை நடைபெற்று வந்தபோதே) நிறவெறிக்கு முடிவு கட்டும் வாக்கெடுப்பு நடைபெற்று நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.