ரஜினி 170வது படத்தில் இணைந்த ரித்திகா சிங்!
நடிகை ரித்திகா சிங் இறுதிச்சுற்று படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு ஒரு சில தமிழ் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
இந்த வரிசையில் தற்போது ரஜினியுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளார். தா.சே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கவுள்ளார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த நிலையில் இதில் ரஜினியுடன் இணைந்து பெண் காவல்துறை அதிகாரியாக ரித்திகா சிங் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இதில் அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா டகுபதி ஆகியோர் நடிப்பதாக கூறப்படுகிறது.