சத்தீஸ்கர் அரசு மருத்துவமனையில் ஷார்ட் சர்க்யூட்-ஆல் 5 நாட்களாக பவர் கட்| Chhattisgarh Govt Hospital power cut for 5 days due to short circuit

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

பஸ்தர்(சத்தீஸ்கர்) : சத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு மருத்துவமனையில் ஷார்ட் சர்க்யூட்-ஆல் 5 நாட்களாக பவர் கட் ஆன போதிலும் டாக்டர்கள் மொபைல் போன் டார்ச்லைட்டில் சிகிச்சை அளித்த டாக்டர்களின் நிலைமையை கண்ட நோயாளிகளின் உறவினர்கள் கொதித்தெழுந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் பஸ்தானார் என்னும் இடத்தின் அருகே உள்ள கிலோபால் என்ற பகுதியில் டிரக் ஒன்றும் பஸ் ஒன்றும் மோதிக்கொண்டன. இச்சம்பவத்தில் 18 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் பஸ்தானார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அங்கு சென்ற போது தான் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கூட முடியாமல் பவர் கட் ஆகி இருந்தது தெரியவந்தது. மேலும் காயம் அடைந்தவர்களின் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் அருகில் உள்ள திமரபால் மருத்துவகல்லூரிக்கு அனுப்பப்பட்டனர்.

இருப்பினும் விபத்து நடந்த இடத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனம் செல்லவில்லை. இதனையடுத்து சித்ரகூட் தொகுதி எம்.எல்.ஏ. ராஜ்மான்பெஞ்சமின் மற்றும் பஸ்தானார் தாசில்தார் ஆகியோர் தங்களின் வாகனங்களில் காயம் அடைந்தவர்களை அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் காயம் அடைந்தவர்களின் உறவினர்களிடையே கோபம் ஏற்பட்டது. அலட்சியத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இவர்களின் கோரிக்கைக்கு உள்ளூர் கிராம மக்களும் ஆதரவு அளித்தனர். மேலும் பஸ்தானார் பகுதியில் உள்ள ஒரே பெரிய மருத்துவமனை இது தான் என்றும், இதனை நம்பியே தாங்கள் இருப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதனிடையே சித்ரகூட் எம்.எல்,ஏ.,ராஜ்மான் பெஞ்சமின் கூறுகையில் நோயாளிகளுக்கான மாற்று ஏற்பாடுகள் செய்ததுடன் அனைத்து பிரச்னைகளையும் உடனே சரி செய்ய மின்துறைக்கு உத்தரவிட்டு உள்ளதாக கூறினார். இச்சம்பவம் குறித்து மின்சாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டதால் மின் பழுது ஏற்பட்டது என்றார்.

இது குறித்து மருத்துவ அலுவலரான டாக்டர் அரிஜித் சவுத்ரி கூறுகையில், மருத்துவமனையில் ஏற்கனவே உள்ள பழுதுகளை சரி செய்யுமாறு மின்துறைக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே கடிதம் அனுப்பி வைத்ததாக கூறினார் .மேலும் கடிதத்தில் மழை காரணமாக சுவர்களில் ஈரப்பதம் இருப்பதால் மின்னழுத்தம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து மருத்துவமனைக்கு தற்போது ஜெனரேட்டர் வேண்டும் எனவும் துறையின் உயர் அதிகாரிகளுக்கும் கடிதம் எழுதி உள்ளதாக டாக்டர் அரிஜித் சவுத்ரி கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.