லண்டன் : மராத்திய மாமன்னர் சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய புலி நகங்களை பிரிட்டன் அருங்காட்சியகத்தில் இருந்து நம் நாட்டுக்கு மீண்டும் எடுத்து வருவதற்கான ஒப்பந்தம் நாளை கையெழுத்தாக உள்ளது.
மஹாராஷ்ரா மாநிலம், மராத்தி நாடாக இருந்த போது, அதை ஆண்ட மாமன்னர் சத்ரபதி சிவாஜி, பீஜப்பூர் சுல்தானின் தளபதியான அப்சல் கானை வீழ்த்த, யாரும் பயன்படுத்திடாத அரிய வகையிலான கூர்மையான புலி நகங்களை பயன்படுத்தினார். இந்த நகங்கள், 1818ல் இந்தியா வந்த கிழக்கு இந்திய கம்பெனியின் அதிகாரியான ஜேம்ஸ் கிராண்ட் டப் என்பவரிடம் அப்போது நினைவு சின்னமாக வழங்கப்பட்டது.
‘வாக் நாக்’ எனப்படும் எக்கு இரும்பால் செய்யப்பட்ட இந்த புலி நகங்கள், தற்போது ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனில் உள்ள விக்டோரியோ – ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதை, மீண்டும் இந்தியா எடுத்து வருவதற்கான முயற்சியை மத்திய அரசுடன் இணைந்து மஹாராஷ்டிரா மாநில அரசு கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டுள்ளது.
புலி நகங்களை இந்தியா எடுத்து வருவதற்கு பிரிட்டன் அரசு ஒப்புக் கொண்டதை அடுத்து, அந்நாட்டு விக்டோரியா அருங்காட்சியகத்துடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. சத்ரபதி சிவாஜியின் முடிசூட்டு விழாவின் 350வது ஆண்டு கொண்டாடப்படும் நிலையில், நாளை இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement