ஹாங்சு: ஆசிய விளையாட்டில் ரோலர் ஸ்கேட்டிங்கில் இன்று(அக்.,02) இந்தியாவுக்கு 2 வெண்கலம் பதக்கம் கிடைத்ததுள்ளது. இதுவரை இந்தியாவுக்கு தங்கம் 13, வெள்ளி 21 வெண்கலம் 21 என மொத்தம் 55 பதக்கங்கள் கிடைத்துள்ளது. பட்டியலில் இந்தியா 4ம் இடத்தில் உள்ளது.
சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர்.
ரோலர் ஸ்கேட்டிங்
ரோலர் ஸ்கேட்டிங் பெண்கள் ஸ்கேட்டிங் 3ஆயிரம் மீட்டர் ரிலே ரேஸ் போட்டியில் இந்திய அணி வெண்கலம் பதக்கம் வென்றுள்ளது. சஞ்சனா, கார்த்திகா, ஹிரல், ஆரதி ஆகியோர் அடங்கிய இந்திய அணி இறுதிப்போட்டியில் 3ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.
அதேபோல், ஆண்கள் ஸ்பிட் ஸ்கேட்டிங் 3 ஆயிரம் மீட்டர் ரிலே ரேஸ் போட்டியில், ஆனந்த் குமார், ஆர்யன் பால் சிங், ராகுல், விக்ரம் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றுள்ளது.
பதக்கப் பட்டியல் நிலவரம்
இதுவரை இந்தியாவுக்கு தங்கம் 13, வெள்ளி 21 வெண்கலம் 21 என மொத்தம் 55 பதக்கங்கள் கிடைத்துள்ளது. பட்டியலில் இந்தியா 4ம் இடத்தில் உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement