Best Gaming Laptop In Amazon Sale 2023: இந்தாண்டுக்கான அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் தள்ளுபடி விற்பனை தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமேசானின் இந்த தள்ளுபடி விற்பனை அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல், அமேசான் பிரைம் சந்தாதாரர்களுக்கு இந்த அமேசான் பிரைம் விற்பனை ஒரு நாள் முன்னாடியே தொடங்கும்.
அதாவது, அவர்களுக்கான விற்பனை அக்டோபர் 7ஆம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் மிகப்பெரிய விற்பனையில் இதுவும் ஒன்றாக உள்ளது. மேலும் அனைத்து வகையிலான பொருள்களுக்கும் தள்ளுபடி மற்றும் அதிரடி ஆப்பர்கள் வழங்கப்படும். இந்த தள்ளுபடி விற்பனையில் நீங்கள் பணம் செலுத்த பயன்படுத்தும் வங்கிகள் சார்ந்தும் பல ஆப்பர்கள் உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நீங்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளராக இருந்து, எஸ்பிஐ கார்டை அமேசான் விற்பனையில் ஏதேனும் பொருளை வாங்க பயன்படுத்துவதன் மூலம், உங்கள் உடனடியாக 10% தள்ளுபடியைப் பெறலாம். அதுவரை நீங்கள் சிறந்த கேமிங் லேப்டாப் பிராண்டுகளில் சிறப்பான தள்ளுபடியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நீங்கள் ஒரு கேமிங்கல் அதிகம் ஆர்வம் கொண்டவராகவும், கேமிங்காக ஒரு லேப்டாப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால் இந்த தொகுப்பு உங்களுக்குதான். அமேசானின் இந்த அட்டகாசமான விற்பனையில், HP, Acer, Dell போன்ற உயர்தர பிராண்டுகளின் கேமிங் லேப்டாப்களில் 40% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்தாண்டுக்கான அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் சிறந்த மூன்று கேமிங் மடிக்கணினிகளை இங்கு காணலாம். அந்த மடிக்கணினிகளின் அம்சங்களும், தள்ளுபிடி விவரங்களையும் இதில் தெரிந்துகொள்ளலாம்.
Dell G15 5520
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் Dell G15 5520 லேப்டாப்பில் 26% வரை தள்ளுபடியில் வழங்குகிறது. Intel Core i5 செயலி மூலம் இந்த லேப்டாப் உங்கள் கேமிங் தேவைகளை வேகத்தை பாதிக்காமல் எளிதாக கையாளும். இந்த லேப்டாப் வலுவான பேட்டரி பேக்கப்புடன் வருவதால் பேட்டரி ஆயுளைப் பற்றி கவலைப்படாமல் நீங்கள் நீண்ட நேரம் கேம்களை விளையாடலாம். இந்த திரை உங்கள் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது. இதன் விலை 69 ஆயிரத்து 990 ரூபாயாக உள்ளது.
Acer Aspire 5
கேமிங் லேப்டாப் ஆன இந்த மாடல், அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் 36% வரை தள்ளுபடியில் கிடைக்கிறது. இந்த கேமிங் லேப்டாப் 15 அங்குல அகல திரையுடன் வருகிறது மற்றும் கேம்களை விளையாடுவதற்கு மட்டுமின்றி பல்வேறு பணிகளை செய்வதற்கும் வசதியாக இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. OS – Windows 11 கொண்ட இந்த லேப்டாப் உங்களுக்கு சிறந்த வேகத்தை வழங்குகிறது.
இதனால் லேப்டாப்பை பயன்படுத்தும் போது எந்த பிரச்சனையும் ஏற்படாது. இந்த லேப்டாப் இரட்டை மின்விசிறிகளுடன் வருகிறது, இது மடிக்கணினி மணிக்கணக்கில் இயங்கினாலும் குளிர்ச்சியாக இருப்பதை உறுதி செய்கிறது. கைரேகை ரீடரின் உதவியுடன், ஒரே ஒரு தொடுதலுடன் நீங்கள் வேகமாக உள்நுழையலாம். இந்த லேப்டாப்பை ப்ளூடூத் மற்றும் வைஃபை இரண்டிலும் எளிதாக இணைக்கலாம். இதன் விலை 52 ஆயிரத்து 990 ரூபாய் ஆகும்.
HP Victus
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் HP Victus லேப்டாப் 18% தள்ளுபடியில் கிடைக்கிறது. இதன் கீ-போர்டில் லைட்டிங் ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளதால், நீங்கள் இருட்டிலும் கூட ஈஸியாக கேம் விளையாடலாம். 16 GB RAM உடன், உங்கள் எல்லா தரவையும் எளிதாகச் சேமிக்கலாம். தடையற்ற கேமிங் அனுபவத்திற்கும் இந்த லேப்டாப் சிரமமில்லாத இணைப்பை வழங்குகிறது. இந்த லேப்டாப் 72 ஆயிரத்து 490 ரூபாயாகும்.