யு.ஐ.டி.ஏ.ஐ.. தலைமை நிர்வாகி பதவி நீட்டிப்பு| Extension of post of UIDAI Chief Executive

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ஆதார் அமைப்பின் ஓங்கிணைந்த இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் சி.இ.ஓ. அமித் அகர்வால் பதவி காலத்தை மேலும் நீட்டித்து இன்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வங்கி கணக்கு முதல் மொபைல் சிம்கார்டு , பத்திரப்பதிவு வரை அனைத்து சேவைகளுக்கு தற்போது ஆதார் அட்டை அடையாள சான்றாக அவசியமாக உள்ளது. இதனை யு.ஐ.டிஏ.ஐ எனப்படும் ஒருங்கிணைந்த இந்திய தனித்துவ அடையள ஆணைய அமைப்பு வழங்கி வருகிறது.இதன் தலைமை நிர்வாகியாக அமித் அகர்வால் உள்ளார்.

இவரது பதவிக்காலம் நவம்பர் 02-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் இவரது பதவிக்காலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சத்தீஷ்கர் மாநிலத்தைச் சேர்ந்த 1993-ம் ஆண்டு பேட்ஸ் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அமித் அகர்வால், நவம்பர் 02 2024-ம் வரை இவர பதவியில் இருப்பதார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.