பேஸ்புக், ட்விட்டர் மற்றும் வாட்ஸப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தினமும் நூற்றுக்கணக்கான கதைகளை பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகள் இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பரப்பி வருகின்றன. இதில் ஏராளமானவை உண்மைக்குப் புறம்பாகவும் வெறுப்புணர்வை தூண்டும் விதமாகவும் அமைந்துள்ளது. மத ரீதியிலான, ஆதாரமற்ற தகவல்கள் மற்றும் வெறுப்புணர்வை தூண்டும் பதிவுகளுக்கு எதிராக மற்ற நாடுகளில் நடவடிக்கை எடுக்கும் அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் சமூக ஊடகங்கள் இந்தியாவில் மட்டும் அதனை கண்டும் காணாதது போல் விட்டுவிடுகின்றன. […]