விஜய் 68ல் உள்ள முதல் பாடலின் சிறப்பு அம்சம்
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய், தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இன்று அக்டோபர் 2ம் தேதி காலை இதன் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றதாக தெரிகிறது. நாளை அக்டோபர் 3ம் தேதி இதன் படப்பிடிப்பு சென்னையில் பிரமாண்டமான அரங்கம் அமைக்கப்பட்ட இடத்தில் பாடல் காட்சியுடன் படப்பிடிப்பை தொடங்குகின்றனர். இந்த பாடல் காட்சியில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால் சமீபத்தில் இணையத்தில் அதிகமாக பேசப்படும் ஏ.ஐ டெக்னாலஜியை பயன்படுத்தி இந்த பாடல் காட்சிகளை உருவாக்குவதாக கூறப்படுகிறது.