சர்வதேச திரைப்பட விழாக்களில் ஸ்ருதிஹாசனின் ‛தி ஐ' ஹாலிவுட் படம்
பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருக்கும் சலார் படத்தில் நடித்திருக்கும் ஸ்ருதிஹாசன், ஹாலிவுட்டில் ‛தி ஐ' என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸிற்கு தயாராகி விட்ட நிலையில், சமீபத்தில் கிரேக்க சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. இதில் சிறந்த இயக்குனர், ஒளிப்பதிவாளர் விருதுக்கு பரிந்துரை செய்துள்ளார்கள். அதையடுத்து லண்டன் திரைப்பட விழாவிலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. இதனால் தி ஐ படம் திரைக்கு வருவதற்கு முன்பே பல விருதுகளை பெறும் என்று தெரிகிறது. ‛தி கிரேமேன்' என்ற ஹாலிவுட் வெப்சீரிஸில் தனுஷ் நடித்தார். அடுத்து தற்போது ஸ்ருதிஹாசன், ‛தி ஐ' படத்தில் நடித்திருக்கிறார். இவர்களை தொடர்ந்து சமந்தாவும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .