ஆசிய விளையாட்டு: கிரிக்கெட்டில் அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா: ஜெய்ஷ்வால் சதம் விளாசல்| 19th Asian Games 2023: T20 cricket: India into semifinals in cricket: Jaishwal hits century

ஹாங்சு: ஆசிய விளையாட்டு போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு இந்திய கிரிக்கெட் அணி முன்னேறியது. இந்திய வீரர் ஜெய்ஷ்வால் சதம் அடித்து விளாசினார்.

சீனாவின் ஹாங்சோ நகரில் 19 ஆவது ஆசிய போட்டிகள் களைகட்டி வருகிறது. இந்திய வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கவேட்டை நடத்தி வருகின்றனர்.

படகுப் போட்டி

ஆசிய விளையாட்டு போட்டி ஆண்களுக்கான இரட்டையர் படகுப் போட்டியில் இந்திய வீரர்கள் அர்ஜூன் சிங், சுனில் சிங் ஆகியோர் வெண்கலம் வென்றுள்ளனர்.

கேனோ ஸ்பிரிண்ட்

கேனோ ஸ்பிரிண்ட் ஆண்கள் கேனோ இரட்டையர் ஆயிரம் மீட்டர் போட்டியில் இந்திய அணி வெண்கலப்பதக்கம் வென்றது. இறுதிப்போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 3.53.329 நிமிடங்களில் அடைந்து அர்ஜூன் சிங், சுனில் சிங் ஆகியோர் கொண்ட இந்திய அணி 3ம் இடத்தை பிடித்தது.

இதனால் கேனோ ஸ்பிரிண்ட் ஆண்கள் கேனோ இரட்டையர் ஆயிரம் மீட்டர் பிரிவில் இந்தியா வெண்கலப்பதக்கம் வென்றது.

latest tamil news

அரையிறுதியில் இந்தியா!

டி20 கிரிக்கெட் ஆண்கள் காலிறுதி சுற்றில் இந்தியா- நேபாளம் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் ஜெய்ஷ்வால் 100 ரன்கள் குவித்து அசத்தினார்.

இதனை தொடர்ந்து 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நேபாளம் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் மட்டும் எடுத்தது. இதனால் நேபாளத்தை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.