கோலிவுட்டின் உச்சங்களில் இருவர் நடிகர் சூர்யாவும் அவரது தம்பியான நடிகர் கார்த்தியும்.
‘ரோலக்ஸ்’ மற்றும் ‘டில்லி’யின் அடுத்தடுத்த பிரம்மாண்ட ‘லைன்- அப்’களுக்கு அதிகப்படியான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. கார்த்தியின் ‘ஜப்பான்’ திரைப்படமும் ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது. இதனையடுத்து இந்த இருவரின் கைகளில் இருக்கும் படங்களின் வரிசை குறித்து இப்போது பார்க்கலாம்.
சூர்யா:
கங்குவா:
சூர்யா நடிக்க இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சூர்யாவின் அதிரடியான தோற்றம்தான் இந்தத் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருப்பதற்கு முக்கியக் காரணம். பீரியட் காலகட்டத்தின் காட்சிகள் அந்திராவிலுள்ள ராஜமுந்திரியின் அடர்ந்த வனப்பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் திஷா பதானி ப்ரீயட் போர்ஷன் அல்லாமல் நிகழ்கால சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/F1urG3WaAAE21S7.jpeg)
வாடிவாசல்:
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா ‘வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிக்கிறார் என்கிற அறிவிப்பு கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியானது. இதற்காக சூர்யா தனது வீட்டில் காளையை வளர்த்து வருகிறார் என்கிற செய்தி பலரும் அறிந்ததுதான். வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் ‘விடுதலை’ திரைப்படம் வெளியாகியிருந்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/04/WhatsApp_Image_2022_09_25_at_9_35_05_PM.jpeg)
அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பின் பரபரப்பாக இயங்கி வருகிறார். ‘விடுதலை -2 திரைப்படத்திற்கு வாடிவாசல் திரைப்படத்திற்கான வேலைகள் தொடங்கும் என ஏற்கெனவே வெற்றிமாறன் ஒரு மேடையில் கூறியிருந்தார். படத்தில் வரும் ஜல்லிக்கட்டு வெளிநாட்டில் ரோபோட்டிக்ஸ் சார்ந்த பணிகளும் நடந்து வருகின்றன.
சூர்யா- சுதா கொங்கரா :
தேசிய விருது வென்ற இந்தக் கூட்டணி ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தின் மூலம் பிளாக்பஸ்டர் வெற்றியைக் கொண்டாடியது. இக்கூட்டணி மீண்டும் இணையப்போவதாக செய்தி சமீபத்தில் கசிந்தது. சூர்யாவின் 43வது திரைப்படமான இதில் துல்கர் சல்மான், பாலிவுட் நடிகர் விஜய் வர்மா ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பேசப்பட்டு வருகின்றன. இத்திரைப்படம் குறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/BeFunky_collage__8_.jpg)
லோகேஷ் கனகராஜ் – சூர்யா :
‘விக்ரம்’ திரைப்படத்தில் ‘ரோலக்ஸ்’ 5 நிமிட கதாபாத்திரமாக இருந்தாலும் அதனுடைய ரீச் `வேற லெவல்’ என்றே கூறலாம். இந்த கதாபாத்திரத்தின் மூலமாகதான் ‘LCU’ என்கிற மிகப்பெரிய பிசினஸ் ப்ராண்ட் தயாராகியிருக்கிறது. இந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தை தனியாக வைத்து ஒரு படம் வரப்போகிறது என்கிற செய்தியும் விக்ரம் திரைப்படத்தின் ரிலீஸ் சமயத்தில் பரவி வந்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/FUuDWD8akAEzkfx.jpg_large.jpeg)
சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி ரசிகர்களிடம் ” ‘ரோலக்ஸ்’ கதாபாத்திரத்தை வைத்து ஒரு தனி திரைப்படத்திற்கான கதையை லோகேஷ் கூறியிருக்கிறார் ” என சூர்யா கூறியிருந்தார். இதுமட்டுமின்றி ‘கைதி’ திரைப்படத்திற்கு முன்பே சூர்யாவுக்கு ‘இரும்புக் கை மாயாவி’ திரைப்படத்தின் கதையை லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார் என்கிற செய்தி பலரும் அறிந்ததுதான். லோகேஷ் கனகராஜின் 10 வருட கனவுத் திரைப்படம் ‘ இரும்புக் கை மாயாவி’. இத்திரைப்படத்தின் மெருகேற்றிய கதையை சமீபத்தில் லேகேஷ் சூர்யாவிடம் கூறியதாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.
பா.இரஞ்சித் – சூர்யா :
பா.இரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கத்தில் சூர்யா ‘ஜெர்மன்’ என்கிற திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார் என்கிற செய்தியும் இணையத்தில் சில நாட்களுக்கு முன்பு பேசப்பட்டது. மேலும் இத்திரைப்படம் தொடர்பான பல தகவல்கள் ‘தங்கலான்’ திரைப்படத்தின் ரிலீஸுக்கு பிறகு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/Pa_Ranjith.png)
கர்ணா :
‘ரங்க் தே பசந்தி’ திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தவர், இயக்குநர் ‘ராகேஷ் ஒம்பிரகாஷ்’. இவர் இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கிறார் எனவும் இத்திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் சூர்யா தடம் பதிக்க விருக்கிறார் எனவும் பேசப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்தின் கதைகளம் மகாபாரதத்தை மையப்படுத்தியிருப்பதாகவும் அதில் சூர்யா ‘கர்ணன்’ கதாபாத்திரத்தில் நடிக்க விருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
‘கங்குவா’ திரைப்படத்தின் அறிவிப்பு தொடர்பான சூர்யாவின் இன்ஸ்டாகிராம் பதிவில் இயக்குநர் ராகேஷ் ஓம் பிரகாஷ் கமெண்ட் செய்ததைத் தொடர்ந்து இத்திரைப்படம் குறித்தான பேச்சு அதிகளவில் இருந்து வருகிறது.
சந்து மொண்டேடி – சூர்யா :
பாலிவுட் மட்டுமின்றி டோலிவுட்டிலும் சூர்யா தடம் பதிக்கவிருக்கிறாராம். ‘கார்த்திகேயா -1,’ திரைப்படத்தின் மூலம் பரிச்சயமானவர் இயக்குநர் சந்து மொண்டேட்டி. இவர் இயக்கத்தில் சூர்யா தெலுங்கில் அறிமுமாகவுள்ளார் எனப் பேசப்பட்ட நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் இந்த தகவலை உறுதிப்படுத்தியிருக்கிறார், இயக்குநர் சந்து மொண்டேட்டி. இத்திரைப்படம் நான்கு வேதங்களை மையப்படுத்தியது எனவும் சொல்கிறார்கள்
பொயப்படி ஶ்ரீனு – சூர்யா:
டோலிவுட்டின் #BB கூட்டணி குறித்து நாம் படித்திருப்பது ஏராளம். அந்த கூட்டணிக்கு முக்கியமானவர் , இயக்குநர் பொயப்படி ஶ்ரீனு. கடந்த 2021 ஆம் ஆண்டு இவர் இயக்கிய ‘அகண்டா’ திரைப்படம் வெளியாகியிருந்தது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/Boyapati_Srinu.jpg)
கடந்த வாரம் இவர் இயக்கத்தில் ‘ஸ்கந்தா’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது. சூர்யா இவருடன் இணையப்போகிறார் என்கிற தகவலும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.
கார்த்தி :
ஜப்பான்:
இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘ஜப்பான்’ திரைப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாகவிருக்கிறது. இது நடிகர் கார்த்தியின் 25வது படம். இத்திரைப்படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. கார்த்தியின் மாறுபட்ட தோற்றம் பார்வையாளர்களை அதிகளவில் வசீகரித்திருக்கிறது. அதற்காகவே அதிகப்படியான எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/MV5BZTlmODY5MWMtZDkyZi00YTU0LThiZWItZWFkYjJjYjFhZmEyXkEyXkFqcGdeQXVyMTA1OTMzNTQw__V1_.jpg)
சர்தார் 2:
கடந்த ஆண்டு தீபாவளிக்கு கார்த்தியின் ‘சர்தார்’ திரைப்படம் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியிருந்த ‘சர்தார்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்தான பேச்சும் இணையத்தில் பேசப்படுகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2022/10/Sardar_Movie_OTT_Release_Date.jpg)
சர்தார் திரைப்படத்தின் முதல் பாகத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில் தற்போது இரண்டாம் பாகத்திற்கு யுவன் இசையமைக்கிறார் எனவும் இதில் விஜய் சேதுபதி நடிக்க பேச்சுவார்த்தை நடந்துவருகின்றது.
நலன் குமாரசாமி – கார்த்தி :
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தியின் 26 வது படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ‘ஜப்பான்’ திரைப்படத்திற்கு பிறகு தொடங்கும் எனக் கூறுகிறார்கள். இத்திரைப்படத்தில் கார்த்தி தீவிரமான எம்.ஜி.ஆர் ரசிகனாக நடிக்கவிருக்கிறார் என்கின்றனர். ‘ஜப்பான்’ திரைப்படத்தின் ஷூட்டிங்கின் போது ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் சில நாட்கள் ‘பொன்னியின் செல்வன் -2 ‘ திரைப்படத்தின் பேட்ச் வேலைகளுக்கு சென்றிருக்கிறார். அந்த இடைவெளியில் நலன் குமாரசாமி படத்தில் கமிட்டாகியிருக்கிறார் கார்த்தி. இத்திரைப்படம் தொடர்பான தகவல்கள் ‘ஜப்பான்’ திரைப்படத்தின் ரிலீஸுக்குப் பிறகு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/download__3_.jfif.jpeg)
பிரேம் குமார் – கார்த்தி:
’96’ பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி தனது 27வது திரைப்படத்தில் நடிக்கப்போகிறார் எனத் தகவல்கள் கடந்த சில நாட்களாகவே பேசப்பட்டு வருகிறது. இத்திரைப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக பி.சி.ஶ்ரீராம் கமிட் ஆகியிருப்பதாகவும் கூறுகிறார்கள். சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீராம் ஒரு பதிவிட்டிருந்தார்.
அதில் அவர் ,” என்னுடைய அடுத்தத் திரைப்படம் ’96’ பிரேம் குமாருடன். அதில் சூர்யா, அரவிந்த்சாமி நடிக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார், சூர்யாவின் 2D நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது “எனப் பதிவிட்டிருந்தார்.
கைதி -2 :
கைதி திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. அதுவே லோகேஷின் இப்படியா கரியருக்கு விதை போட்டிருக்கிறது. ‘LCU’ என்கிற மிகப்பெரிய பிசினஸின் தொடக்கப் புள்ளி ‘கைதி’ திரைப்படம்தான். அதனைத் தொடர்ந்து ‘கைதி -2 ‘ படத்திற்கான வேலைகள் ‘லியோ’ படத்திற்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது லோகேஷ் சூப்பர்ஸ்டாருடன் கமிட்டாகியிருக்கிறார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/kaithi_karthi.jpg)
கார்த்தி – பா.இரஞ்சித் :
‘மெட்ராஸ்’ திரைப்படம் வெளியாகி 9 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தற்போது அந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் இனையவிருக்கிறது என கடந்த ஒரு வாரமாக சமூக வலைதளப் பக்கங்களில் பேசப்பட்டு வருகிறது. தனது டைரக்ஷன் கரியரில் இரண்டாவது படத்தை நடிகர் கார்த்தியை வைத்து இயக்கிய இயக்குநர்களின் தற்போதைய நிலை உச்சம்தான். அந்த வரிசையில் லோகேஷ் கனகராஜ், பா.இரஞ்சித், அ.வினோத் அடங்குவார்கள்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/210729.jpg)
பா.இரஞ்சித் தற்போது ‘தங்கலான்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணியில் பரபரப்பாக இயங்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து ‘சார்பட்டா பரம்பரை -2’, கமல் ஹாசனை வைத்து ஒரு திரைப்படம் என கையில் லிஸ்ட் வைத்திருக்கிறார். இவற்றில் சில படங்கள் பேச்சுவார்த்தை அளவிலேயே இருக்கின்றன. அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம். இந்த காம்பினேஷனில் எந்த படத்திற்காக நீங்கள் ஆவலாகக் காத்திருக்கிறீர்கள் என கமென்ட்டில் பதிவிடுங்கள்