புதுடில்லி: டில்லியில் ‘நியூஸ் க்ளிக்’ இணையதளசெய்தி நிறுவனத்திற்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் டில்லி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பத்திரிகையாளர்கள் அபிசார் சர்மா, பாஷா சிங் உள்ளிட்டோர் வீடுகளிலும் சோதனை நடந்தது.
அந்த நிறுவனத்தில் பணி புரியும் 8 பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் வீடுகளில் சோதனை நடந்து வருகிறது. சீனாவிடம் இருந்து சட்ட விரோதமாக நிதி பெற்றதாக அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சோதனைகள் நடத்தியதற்கு பிரஸ் கிளப் ஆப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
யார் யார் வீட்டில் ரெய்டு?
பத்திரிகையாளர் அபிசார் சர்மா, மூத்த பத்திரிகையாளர் பாஷா சிங், மூத்த பத்திரிகையாளர் ஊர்மிளேஷ், நியூஸ் கிளிக் ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தா மற்றும் எழுத்தாளர் கீதா ஹரிஹரன், பிரபல பத்திரிகையாளரும் அரசியல் பொருளாதாரம் குறித்த வர்ணனையாளருமான அவுனிந்தியோ சக்ரவர்த்தி, ஆர்வலரும் வரலாற்றாசிரியருமான சோஹைல் ஹஷ்மி மற்றும் நையாண்டி ஆகியோரின் வீடுகளில் டில்லி போலீசார் அதிகாலை சோதனை நடத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement