ஜோகனஸ்பர்க் : ஜிம்பாப்வேவில் நிகழ்ந்த விமான விபத்தில், நம் நாட்டைச் சேர்ந்த பிரபலமான சுரங்கத் தொழில் அதிபர் ஹர்பால் ரன்த்வா, 60, மற்றும் அவரது மகன் உட்பட ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ஆப்ரிக்காவின் தெற்கு பகுதியில் உள்ள ஜிம்பாப்வேயில் தங்கம், நிலக்கரி, தாமிரம் ஆகியவற்றைச் சுத்திகரிக்கும் சுரங்க நிறுவனமான ரியோஜிம்மி-ன் உரிமையாளர் ஹர்பால் ரன்த்வா.
இந்தியரான இவர், அங்குள்ள சுரங்கங்களில் இருந்து தங்கம், வைரம், நிலக்கரி உள்ளிட்டவற்றை எடுக்கும் பணிகளை தன் நிறுவனத்தின் வாயிலாக மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், ஹராரேயில் இருந்து முரோவா பகுதியில் உள்ள வைர சுரங்கத்தை பார்வையிட, ஹர்பால் ரன்த்வா, தன் மகன் உட்பட ஆறு பேருடன் சிறிய ரக விமானத்தில் கடந்த, 29ம் தேதி சென்றார். அப்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த ஆறு பேரும் பலியானதாக, அந்நாட்டு போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement