உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியாவின் ஆட்டம் மழையால் ரத்து| World Cup practice match: Indias match canceled due to rain

திருவனந்தபுரம்: இந்தியாவில் வரும் 5ம் தேதி முதல் உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடர் நடைபெற உள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் மற்ற பிரிவை சேர்ந்த 2 அணிகளுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுகின்றன. அந்த வகையில் இந்திய அணி கடந்த அக்.,1ல் இங்கிலாந்து அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் மோதுவதாக இருந்தது. ஆனால், மழை குறுக்கிட்டதால் ‘டாஸ்’ போடாமலேயே அந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று (அக்.,3) திருவனந்தபுரத்தில் நெதர்லாந்து அணியுடனான பயிற்சி போட்டிக்காக இந்திய அணி தயாராக இருந்தது. ‘டாஸ்’ போடும் நேரத்தில் இருந்து விட்டுவிட்டு மழை பெய்து வந்ததால், இந்த பயிற்சி ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது. இந்த உலக கோப்பையில் இந்திய அணிக்கு எந்த பயிற்சி ஆட்டமும் விளையாட கைகொடுக்கவில்லை.

இந்திய அணி தனது துவக்க ஆட்டத்தில் அக்.,8ம் தேதி சென்னையில் ஆஸ்திரேலிய அணியை சந்திக்கிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.