சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு காரணமாக விமானங்கள் புறப்படுவதில் தாமதம்!
சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு காரணமாக விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணியில் இருந்து காலை 6 மணி வரை இணையதள சேவை பாதிப்பு காரணமாக 20 விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
துபாய், சார்ஜா, தோகா, அபுதாபி, லண்டன் உள்ளிட்ட 8 சர்வதேச விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. அந்தமான், அகமதாபாத், புனே, டெல்லி, தூத்துக்குடி, பெங்களூர் உள்ளிட்ட 12 உள்நாட்டு விமானங்களும் தாமதமானதாக தகவல் வெளியாகி உள்ளது.