பாங்காங், –
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் வணிக வளாகம் ஒன்று செயல்படுகிறது. இங்கு நேற்று ஏராளமானோர் சென்றிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் கண்ணில் படுகிறவர்களையெல்லாம் குருவியை சுடுவது போல சுட்டு தள்ளினார். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். மேலும் 6 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதனையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :