வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்டாக்ஹோம்: வேதியியலுக்கான நோபல் பரிசு, அமெரிக்கா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்வீடனை சேர்ந்த ஆய்வாளர் ஆல்ப்ரெட் நோபல் நினைவாக, ஆண்டுதோறும் நோபல் பரிசு அளிக்கப்படுகிறது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் என ஆறு துறைகளில் சாதனை படைத்தோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் அறிவிக்கப்படும். அந்த வகையில் 2023ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் நேற்று முன்தினம் (அக்.,2) முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதல் நாளான நேற்று முன்தினம் மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. நேற்று இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இன்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி நடப்பாண்டில் அமெரிக்காாவைச் சேர்ந்த இரண்டு விஞ்ஞானிகள் மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானிக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
அமெரிக்காவை சேர்ந்த மவுங்கி பவெண்டி, லூயிஸ் புரூஸ் மற்றும் ரஷ்யாவின் அலெக்ஸி எகிமோவ் ஆகியோர் நோபல் பரிசினை பெற உள்ளனர். குவாண்டம் புள்ளிகளை கண்டுபிடித்து தொகுத்ததற்காக அவர்களுக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
இவர்களுக்கு நோபல் பரிசுடன், 8 கோடி ரூபாய்க்கான ரொக்கப் பரிசும் அளிக்கப்படும். ஆய்வாளர் ஆல்ப்ரெட் நோபலின் நினைவு தினமான டிச.,10ம் தேதி, ஆண்டுதோறும் இந்த பரிசுகள் அளிக்கப்படுவது வழக்கம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement