"நான் கலை­ஞ­ரின் வச­னங்­களை பேசி நடிப்­பதா ? நடக்­காத காரி­யம்…" -ரஜினி பகிர்ந்த பிளாஷ்பேக்

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்கங்கள், போட்டிகள், விழாக்கள், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை திமுக.

இந்நிலையில் கலைஞருடனான நினைவுகள், அவரின் அரசியல்-சினிமா-இலக்கிய பங்களிப்புக் குறித்து சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் உரையாற்றி, கட்டுரைகள் எழுதி வருகின்றனர். அவ்வகையில் தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரமான ரஜினிகாந்த், முரசொலியில், ‘கலைஞர் இதயத்தில் எனக்கென்று தனி இடம் இருந்தது!’ என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளது பேசுபொருளாகி வருகிறது.

அதில், கலைஞரின் வசனத்தில் படம் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டது குறித்து தனக்கே பாணியில் சுவாரஸ்யமாகக் குறிப்பிட்டுள்ளார் ரஜினி.

ரஜினிகாந்த் – கருணாநிதி

அந்தக் கட்டுரையில், “நான் 1980–ல் ஒரு திரைப்­ப­டத்­தில் நடிக்க ஒப்­பந்­த­மா­கி­யி­ருந்­தேன்; அந்தப் படத்திற்கு கலை­ஞர் அவர்­கள் வச­னம் எழுத ஒப்­புக் கொண்­டார்; எளி­மை­யான தமிழ் வச­னங்­களை பேசி நடிப்­ப­தற்கே திண்­டா­டிக் கொண்­டி­ருக்­கும் நான் கலை­ஞ­ரின் வச­னங்­களைப் பேசி நடிப்­பதா ? நடக்­காத காரி­யம்… இதற்கு நான் கர்­நா­ட­கா­விற்கே ஓடிப்­போய் மறு­ப­டி­யும் பேருந்­தில் டிக்­கெட் விற்க ஆரம்­பித்து விட­லாம். ‘தயா­ரிப்­பா­ள­ரி­டம் முடி­யவே முடி­யாது’ என்று கூறி­னேன்’.

“சார் உங்­கள் வச­னங்­களை நான் பேச முடி­யாது. எளி­மை­யான தமிழை பேசவே நான் சிர­மப்­ப­டு­கி­றேன். அப்­படி இருக்­கும் போது உங்­கள் வச­னங்­களை எப்­படி நான் பேசு­வது? என்­னால் முடி­யாது. தவ­றாக நினைக்க வேண்­டாம்’ என்று கலைஞரிடம் கூறி­னேன்” என்றார்.

மேலும், அதற்காகத் தான் இன்னும் வருத்தப்படுவதாகக் கூறும் ரஜினி, “தயா­ரிப்­பா­ள­ரின் மன­தை­யும்துன்­பு­றுத்­தா­மல், ‘காலம் மிக­வும் கம்­மி­யாக இருக்­கின்­றது. அடுத்த படத்­தில் பார்த்­துக் ­கொள்­ள­லாம்’ என்று தயாரிப்பளரிடன் கூறிவிட்டார் கலைஞர்;

அவ­ரு­டைய செய்­கை­யால் எனக்கு அவர் மீது இருந்த மதிப்­பும், மரி­யா­தை­யும் பல மடங்கு உயர்ந்­தது. ஆனா­லும் அவ­ரு­டைய வச­னங்­களை பேசி நடித்­தி­ருக்­க­லாமோ? தவறு செய்து விட்­டோமோ? என்ற ஒரு குற்ற உணர்ச்சி இன்­றும் எனக்­குள் இருந்து கொண்டே இருக்­கின்­றது” என்று நெகிழ்ச்சியாக கலைஞருடனான நினைவு குறித்துப் பகிர்ந்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.