புதிய வர்த்தக உயர் நீதிமன்றமொன்றை கொழும்பு 12, நீதிமன்ற மாவத்தை, இல. 80 இல் நிருமாணிப்பதற்கான நீதிமன்ற, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்த அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
அபிவிருத்தி இலக்கை நோக்காகக் கொண்டு நாட்டில் மிகவும் சிறந்த நீண்டகால முதலீடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனைக் கருத்திற்கொண்டு வர்த்தகக் காரணிகள் தொடர்பாக தற்போது காணப்படும் அதிகரித்த வழக்குகளின் எண்ணிக்கையை விரைவாகத் தீர்த்து முடிவுறுத்துவதற்காக புதிய வர்த்தக நீதிமன்றமொன்றை நிறுவுவதற்கான அவசியத்தை வலியுறுத்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.