![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1696425435_NTLRG_20231004111836549707.jpg)
‛ரஜினி 170' துவங்கியது : புதிய தோற்றத்தில் ரஜினி
ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு ‛ஜெய் பீம்' பட இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் தனது 170வது படத்தில் நடிக்கிறார். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.
கடந்த சில நாட்களாக இந்த படத்தின் நடிக்கும் நடிகர், நடிகைகளின் பெயர்களை அறிவித்து வந்தனர். துஷரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில், அமிதாப் பச்சன் ஆகியோர் இணைந்து நடிப்பதாக தெரிவித்தனர். தமிழ் கலைஞர்களுடன் ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என பன்மொழி கலைஞர்களும் நடிக்கின்றனர்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/cine_News_20231004173057.jpg)
இந்த நிலையில் இன்று(அக்., 4) இதன் படப்பிடிப்பு தொடங்குவதாக தயாரிப்பு தரப்பு, ரஜினியின் புதிய தோற்றத்துடன் அறிவித்துள்ளது. மேலும், இந்த முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் தொடங்குகி உள்ளது. இதற்காக நேற்று திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார் ரஜினி. அப்போது இந்த படம் நல்ல கருத்துள்ள கமர்ஷியல் படமாக, பிரமாண்டமாய் உருவாவதாக அவர் தெரிவித்தார்.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/cine_News_20231004173100.jpg)
பூஜை படங்கள் வெளியீடு
திருவனந்தபுரத்தில் ரஜினி 170வது படத்தின் பூஜை நடந்துள்ளது. இது தொடர்பான போட்டோக்களை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ரஜினி, மஞ்சுவாரியர், ஞானவேல், நடிகர் ரக் ஷன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.