டில்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் கைது| AAPs Sanjay Singh Arrested In Delhi Liquor Policy Case Hours After Raids

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

புதுடில்லியில் கடந்த 2021 நவம்பரில் புதிய மதுபான கொள்கையை ஆம் ஆத்மி அரசு அமல்படுத்தியது. இதன்படி 849 மதுபான கடைகள் தனியாருக்கு வழங்கப்பட்டன. இதில் நடைபெற்ற முறைகேடுகளால் அரசுக்கு ரூ.2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சிபிஐ, அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளன.

இதையடுத்து. அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., தனித்தனியே வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தன. இந்த வழக்கில், டில்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் இந்த வழக்கில் அப்ரூவராக மாறியவருமான தினேஷ் அரோரா , தனது வாக்குமூலத்தில் சஞ்சய் சிங் பெயரை குறிப்பிட்டார். இதனையடுத்து, அவரது வீட்டில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

சோதனையைத் தொடர்ந்து இன்று மாலை சஞ்சய் சிங்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சஞ்சய் சிங் கைதானார்.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஏற்கனவே டில்லியில் அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் மற்றும் மணிஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது 3வதாக சஞ்சய் சிங் கைதாகி உள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement




Dinamalar iPaper –>

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.