சீனாவின் ஹங்சோ நகரில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் 17 வருடங்களின் பின்னர் இலங்கையின் புதிய சாதனையுடன் 2 வது (தொ) இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சார்ஜன் நதீஷா லேகம்கே ஈட்டி எறிதல் போட்டியில் 61.57 மீட்டர் திறன் வெளிப்பாட்டுடன் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
45 உறுப்புரிமை கொண்ட ஆசிய ஒலிம்பிக் பேரவையின் 12,000க்கும் மேற்பட்ட விளையாட்டு வீர வீராங்கனைகள், சீனா ஹங்சோவில் நடைபெற்று வரும் 19 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கின்றனர்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் சீனாவில் சாதனை படைத்த வீராங்கனைக்கு தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.