கைத்துப்பாக்கி; ஓடும் ரயிலில் பயணிகளை அலறவிட்ட கேரள இளைஞர்கள்! – சுற்றிவளைத்துப் பிடித்த போலீஸ்

கேரள மாநிலம், பாலக்காட்டிலிருந்து திண்டுக்கல்,​ மதுரை வழியாக இன்று காலை திருச்செந்தூர் ​நோக்கி ரயில் சென்றது. திண்டுக்கல்​ ரயில் நிலையத்தைத் தாண்டி வந்து கொண்டிருந்தபோது, நீண்ட தலைமுடி மற்றும் பெரிய டிராவல் பேக்குகளுடன் ​4 இளைஞர்கள் நவீன கைத்துப்பாக்கியுடன்,​துப்பாக்கியை மாறி மாறி உபயோகிப்பது போலவும், புல்லட் சொருகுவதுபோலவும் ​சைகை செய்த​னர். மேலும், துப்பாக்கியைப் ​பயணிகளை நோக்கி சுடுவதுபோல காட்டி​அச்சுறுத்தியிருக்கின்றனர். 

கொடைரோடு

அச்சமடைந்த ரயில் பயணிகள் பெட்டியிலுள்ள ரயில்வே அவசர எண் மூலம் ரயில்வே கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்த​னர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கொடைக்கானல்ரோடு இருப்புப்பாதை காவல்துறையினர் மற்றும் அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளர் குமரேசன் தலைமையிலான ​போலீஸார், கொடைக்கானல்​ரோடு ரயில் நிலையத்தில் காத்திருந்தனர்​. 

​குறிப்பிட்ட ரயில், ரயில் நிலையத்தை வந்தடைந்ததும், உடனடியாக பிரச்னைக்குரிய ரயில் பெட்டி​யில் ஏறி துப்பாக்கி வைத்திருந்த 4 இளைஞர்களையும் பிடித்து கீழே இறக்கி​னர். பிறகு அவர்களின் உடைமைகளை சோதனை செய்து, அவர்களிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகளைப் பறிமுதல் செய்தனர்​. ​அவர்களிடம் கைப்பற்றப்பட்ட துப்பாக்கி, நவீன ரக துப்பாக்கி மாடலைச் சேர்ந்த பொம்மை துப்பாக்கி​ என்பது தெரியவந்தது.

கேரள இளைஞர்கள்

மேலும் அவர்களிடம் நடத்திய  விசாரணையில், கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த அமீன்ஷெரீஃப் (19), கண்ணூரைச் சேர்ந்த அப்துல் ராசிக் (24), பாலக்காட்டைச் சேர்ந்த ஜப்பல்ஷா (18), காசர்கோட்டைச் சேர்ந்த முகமது சின்னான் (20) ஆகியோர் என்பதும் ​தெரியவந்தது. அவர்கள் பாலக்காட்டிலிருந்து திருச்செந்தூருக்குச் சென்ற ரயிலில் மதுரை வரை சென்று, பின்னர் மதுரையிலிருந்து ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்காவுக்குச் செல்ல​விருந்தனர். 

போலீஸார் விசாரணை

மேலும் காவல்துறையினர் மற்றும் திண்டுக்கல் இருப்புப்பாதை காவல் துறையினர் இணைந்து, அவர்கள் கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, கொள்ளையடிக்கும் கும்பலைச் சேர்ந்தவர்களா அல்லது வேறு ஏதும் நோக்கத்துக்காகச் சென்றவர்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்​. ஓடும் ரயிலில் கைத்துப்பாக்கியைக் காட்டிப் பயணிகளை மிரட்டிய நான்கு பேரை, சுற்றிவளைத்துக் காவல்துறை கைதுசெய்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி​யது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.