![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/NTLRG_20231004161400193237.jpg)
75 நாட்களில் 150 மில்லியனை நெருங்கிய துல்கர் சல்மானின் வீடியோ ஆல்பம்
நடிகர் துல்கர் சல்மான் தற்போது மலையாளம் மட்டுமல்லாது தமிழ், தெலுங்கு அதையும் தாண்டி பாலிவுட் வரை தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தி விட்டார். அதற்கு ஏற்றபடி மொழிக்கு ஒன்றாக தற்போது இந்த நான்கு மொழிகளிலும் மாறிமாறி நடித்து வருகிறார் துல்கர் சல்மான். இந்த நிலையில், தான் முதன்முதலாக ஹீரியே என்கிற வீடியோ ஆல்பத்தில் நடித்திருந்தார். கடந்த ஜூலை மாத இறுதியில் வெளியான இந்த ஆல்பம் வரவேற்பை பெற்றுள்ளது.
தற்போது இரண்டரை மாதமே ஆன நிலையில் 145 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. இது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள துல்கர் சல்மான், ஹீரியே ஒரு மறக்க முடியாத பயணம் என்று கூறியுள்ளார். இந்த ஆல்பத்தில் துல்கர் சல்மானுடன் பிரபல பாலிவுட் மற்றும் பஞ்சாபி பாடகியான ஜேஸ்லின் ராயல் இணைந்து நடித்துள்ளார்.