சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. விஜய் – லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு மிகப் பெரியளவில் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதேநேரம் நாளை மாலை லியோ படத்தின் ட்ரெய்லரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், லியோ ரன்னிங் டைம், சென்சார் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.