![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1696473733_NTLRG_20231004170602881922.jpg)
எதிர்நீச்சலில் என்ட்ரி கொடுத்த வேல ராமமூர்த்தி
எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி வந்த மாரிமுத்து மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கதாபாத்திரத்தில் எந்த நடிகரை நடிக்க வைப்பது என்று தெரியாமல் ஒட்டுமொத்த சீரியல் குழுவும் குழம்பி தவித்தனர். இதற்கிடையில் இந்த கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடிக்க உள்ளதாக தகவல் கசிய ரசிகர்கள் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், வேல ராமமூர்த்தி தான் படங்களில் பிசியாக நடித்து வருவதாகவும் சீரியலில் நடிப்பது குறித்து முடிவு எடுக்கவில்லை என்றும் கூறியிருந்தார். இதனால் பலரும் ஏமாற்றமடைந்தனர்.
இந்நிலையில், தற்போது வேல ராமமூர்த்தியே எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் மாஸாக என்ட்ரி கொடுக்கும் புரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மாரிமுத்துவை விட டபுள் சம்பளம் வழங்கப்பட்டதால் தான் வேல ராமமூர்த்தி சீரியலில் நடிக்க ஓகே சொல்லியிருக்கிறார் என்ற செய்தியும் சின்னத்திரை வட்டாராங்களில் பேசப்பட்டு வருகிறது.