வாரணாசி,உத்தர பிரதேசத்தில் சொகுசு கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட எட்டு பேர் பலியாகினர்.
உத்தர பிரதேசத்தின், வாரணாசி – லக்னோ நெடுஞ்சாலையில் நேற்று சென்று கொண்டிருந்த எஸ்.யு.வி., ரக சொகுசு கார் மீது, எதிரே வந்த லாரி மோதியது. இதில், காரில் பயணித்த எட்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
அதில் இருந்த 9 வயது சிறுவன் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இறந்தவர்கள் அனைவரும் உ.பி.,யின் பிலிபித் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அவர்கள், வாரணாசியில் இருந்து ஜவுன்பூருக்கு வாடகை காரில் சென்றபோது விபத்தில் சிக்கி உள்ளனர்.
இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர், அவர்களது உறவினர்கள் மூன்று பேர் மற்றும் கார் ஓட்டுனர் உட்பட எட்டு பேர் உயிரிழந்தது தெரியவந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement