பந்தலூர்”: கேரளா மாநிலம் வயநாடு மாவட்டம் கம்பமலை எஸ்டேட்டில், தமிழ் மற்றும் மலையாள மொழி பேசும் தொழிலாளர்கள் 110 பேர் பணியாற்றி வருகின்றனர். இங்குள்ள கேரளா அரசுக்கு சொந்தமான அலுவலகத்திற்கு கடந்த 27ம் தேதி இரவு வந்த நக்சல் கும்பல், அலுவலகத்தை உடைத்து சேதப்படுத்தி போஸ்டர்களை கொண்டு சென்றனர். தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தினார்கள்.
இந்நிலையில் மீண்டும் கேரளா மாநில நக்சல் தலைவர் மொய்தீன் தலைமையில், ஆறு பேர் கொண்ட நக்சல் கும்பல் வந்துள்ளது. அலுவலகத்தில் பொருத்திருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர்.
இதனால் தமிழக எல்லை சோதனை சாவடிகளில், போலீசார் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் வரும் வாகனங்களை பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கின்றனர். தொடர்ந்து எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement