Ind vs Aus: இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு! சுப்மன் கில் விளையாடமாட்டார்!

IND vs AUS: உலக கோப்பை 2023 தொடர் தற்போது இந்தியாவில் தொடங்கி உள்ளது.  முதல் போட்டியில் நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடின. இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது நியூஸிலாந்து.  கான்வே மற்றும் ரவீந்திரா சதம் அடித்து அசத்தினர்.  வரும் ஞாயிற்றுக்கிழமை அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.  இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் உலகக் கோப்பை 2023 ஆட்டத்திற்கு முன்னதாக இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.  நல்ல ஃபார்மில் உள்ள ஷுப்மான் கில்லுக்கு தற்போது உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் அவர் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

Shubman Gill is suffering from dengue. (Dainik Jagran).

Wishing him a speedy recovery! pic.twitter.com/g5po5sdNrf

— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 6, 2023

கில் விளையாடவில்லை என்றால் இஷான் கிஷான் ஓப்பன் செய்ய வாய்ப்புள்ளது. சமீப காலங்களில் ஒருநாள் போட்டிகளில் இந்தியாவின் மிகச்சிறந்த பேட்டரான கில், அதிக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விஷயத்தில் இறுதி முடிவு சனிக்கிழமை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  தற்போது வெளியான தகவலின் படி, கில்லுக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  “சென்னைக்கு வந்ததில் இருந்து ஷுப்மனுக்கு அதிக காய்ச்சல் இருந்தது. அவருக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன” என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  ஷுப்மன் கில் டெங்குவால் பாதிக்கப்பட்டு இருந்தால், ஓரிரு ஆட்டங்களைத் தவறவிடக்கூடும் என்றும் கூறப்படுகிறது.  டெங்கு நோயாளிகளின் உடல் குணமடைய பொதுவாக 7-10 நாட்கள் வரை ஆகும்.  

ஷுப்மன் கில்

2023 ஆம் ஆண்டில் 20 ODIகளில், கில் 1230 ரன்களை சராசரியாக 72.35 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 105 க்கு மேல் எடுத்துள்ளார். அவர் இந்த ஆண்டு 5 சதங்கள் மற்றும் 5 அரைசதங்களை அடித்துள்ளார்.  ஒரு வாரத்திற்கு முன்பு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியிலும் நல்ல ரன்களை அடித்து இருந்தார் கில், இந்த தொடரில் இந்தியா 2-1 என வெற்றி பெற்று இருந்தது.  கில் விளையாடவில்லை என்றால் இந்திய அணிக்கு அடுத்த சாய்ஸ் இஷான் கிஷன் தான்.  இஷான் இந்த ஆண்டு 13 இன்னிங்ஸ்களில் நான்கு அரைசதங்களுடன் 409 ரன்கள் எடுத்தார், அதே நேரத்தில் வரிசையின் எந்த நிலையிலும் பேட்டிங் செய்யும் திறனையும் வெளிப்படுத்தினார். மேற்கிந்தியத் தீவுகள் ODI தொடரில் 52, 55 மற்றும் 77 ஆகிய மூன்று அரை சதங்கள் மற்றும் இந்தியாவின் ஆசியக் கோப்பை தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 5-வது இடத்தில் பேட்டிங் செய்து 82 ரன்கள் எடுத்தார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா அணிகள்

இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், முகமது ஷமி, இஷான் ஷமி , சூர்ய குமார் யாதவ்.

ஆஸ்திரேலியா அணி: பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, ஜோஷ் இங்கிலிஸ், சீன் அபோட், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுசாக்னே, மிட்ச் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டேவிட் வார்னர், ஆடம் ஜம்பா, மிட்செல் ஸ்டார்க்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.