![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1696569913_NTLRG_20231005160247979824.jpg)
3 பாகங்களாக உருவாகும் ராமாயணம் : சீதாவாக சாய் பல்லவி
‛பிரேம்' படம் மூலம் அறிமுகமாகி இப்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சாய் பல்லவி. குறிப்பாக தெலுங்கு சினிமாவில் இவருக்கு அதிக வாய்ப்புகள் வருகின்றன. இருப்பினும் தனக்கான படத்தை தேர்ந்தெடுத்து மட்டுமே நடித்து வருகிறார். அடுத்து பாலிவுட்டிலும் கால்பதிக்க உள்ளார். அமீர்கான் படத்தில் இவர் நடிப்பதாக தகவல் வந்தது.
இந்நிலையில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையும், தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் ராமாயணத்தை படமாக ஹிந்தியில் தயாரிக்கப்போவதாக அறிவித்திருந்தார். இதை நிதேஷ் திவாரி இயக்குகிறார். இதில் ராமராக ரன்பீர் கபூர் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இப்போது சீதையாக சாய் பல்லவி நடிக்க போகிறாராம். அதேப்போன்று ராவணன் வேடத்தில் கேஜிஎப் புகழ் யஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ளனர். அடுத்தாண்டு படப்பிடிப்பு துவங்கி, முதல்பாகம் அடுத்தாண்டு இறுதியில் வெளியாகும் என கூறப்படுகிறது.