சென்னை: உலக புகழ் பெற்ற உடன்குடி கருப்பட்டிக்கு (பனை வெல்லம்) புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதனால், பனை விவசாயிகள், கருப்பட்டி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு (Geographical indication) எனப்படும். இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையும், நன்மதிப்பையும், பறைசாற்றும் சான்றாக விளங்கும். இது ஒரு தனிப்பட்ட அடையாளங்காட்டி மட்டுமின்றி, ஒரு குறிப்பிட்ட […]