ஆசிய விளையாட்டுப் போட்டியில் இலங்கைக்கு 5 பதக்கங்கள்

2023ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்றுவருகின்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தடகளப் போட்டிகள் நேற்று (05) நிறைவடைந்த நிலையில், இலங்கை ஒரு தங்கப் பதக்கம், ஒரு வெள்ளிப் பதக்கம், இரண்டு வெண்கலப் பதக்கங்கள் என 4 பதக்கங்களை வென்றுள்ளது.

தடகளத்திற்கு மேலதிகமாக, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றது, இதனால் இந்த ஆண்டு விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மொத்த பதக்கங்களின் எண்ணிக்கை 5 ஆகும். ஆசிய விளையாட்டுப் போட்டி வரலாற்றில் 21 வருடங்களின் பின்னர் இலங்கை 5 அல்லது அதற்கு மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளமையும் விசேட அம்சமாகும். கடந்த 2002ஆம் ஆண்டு இலங்கை 2 தங்கப் பதக்கங்கள், 1 வெள்ளிப் பதக்கம், 3 வெண்கலப் பதக்கங்கள் என 6 பதக்கங்களை வென்றிருந்தது.

பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய தருஷி கருணாரத்ன ஒரு தங்கப் பதக்கத்தை வென்றார்.

அதன்படி, இம்முறை 2023 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் இன்று (05) சீனா, 177 தங்கப் பதக்கங்களுடன் மொத்தமாக 333 பதக்கங்களை வென்று முதலிடத்தைப் பெற்றுள்ள அதேவேளை, 5 பதக்கங்களை வென்ற இலங்கை பதக்கங்கள், அட்டவணையில் 25வது இடத்தில் உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.