அஜித் துவக்கிய வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர் : அக்., 23ல் துவங்குகிறது

நடிகர் அஜித் குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. அஜித்துடன் த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த நிலையில் அஜித் குமாரின் பைக் டூர் கம்பெனி குறித்த ஒரு தகவலை அவரது மேலாளர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், வீனஸ் மோட்டார் சைக்கிள் டூர் என்ற பைக் டூர் நிறுவனத்தை அஜித்குமார் தொடங்கியுள்ளார். இதில் அனுபவம் வாய்ந்தவர்களின் வழிகாட்டுதலின்படி டூர்கள் அமைத்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு தற்போது ராஜஸ்தான், அரபு நாடுகள், ஓமன், தாய்லாந்து, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு பைக் பயணம் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும், இங்கிருந்து அந்த நாடுகளுக்கு செல்லக்கூடிய பாதைகள், தங்கக்கூடிய அனைத்து இடங்கள் குறித்து அனுபவம் வாய்ந்த நபர்களின் ஆலோசனைப்படி ரைடுகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். வருகிற அக்டோபர் 23ம் தேதி முதல் வீனஸ் நிறுவனத்தின் முதல் டூர் துவங்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.