ரூ.2.30 லட்சம் வரை எம்ஜி ZS EV மின்சார காரின் விலை குறைப்பு

100வது ஆண்டு விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் ZS EV எலக்ட்ரிக் காரின் விலை ரூ.50,000 முதல் ரூ.2.30 லட்சம் வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. மூன்று விதமான வேரியண்டுகளில் கிடைக்கின்ற இசட்எஸ் இவி இந்தியாவின் பிரசத்தி பெற்ற எலக்ட்ரிக் கார்களில் ஒன்றாகும்.

17 விதமான பிரத்தியேகமான இரண்டாம் கட்ட ADAS உடன் கூடிய புதிய, டாப் இசட்எஸ் எக்ஸ்குளூசிவ் புரோ வேரியண்டும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

MG ZS EV Price

50.3kWh பேட்டரி பேக்குடன் வந்துள்ளது. இதன் பெரிய பேட்டரியின் காரணமாக 461km (ICAT சோதனையின் படி) ZS EV மின்சார கார் அதிகபட்சமாக 176hp மற்றும் 353Nm டார்க் உற்பத்தி செய்யும் முன்புறம் பொருத்தப்பட்ட மின்சார மோட்டார் மூலம் செயல்படுத்தப்படுகிறது.

ZS EV மின்சார காரில் சேர்க்கப்பட்டுள்ள ADAS ஆனது குறைந்த, நடுத்தர மற்றும் அதிக உணர்திறன் மூன்று நிலைகளில் வேலை செய்யும், மேலும், ஹாப்டிக், ஆடியோ மற்றும் விஷுவல் ஆகிய மூன்று எச்சரிக்கை அமைப்புகளைக் கொண்டிருக்கும்.

MG ZS EV Price:

Variant Ex-showroom price
Excite Rs. 22,88,000
Exclusive Rs. 24,99,800
Exclusive Iconic Ivory Rs. 25,09,800
Exclusive Pro Rs. 25,89,800
Exclusive Pro Iconic Ivory Rs. 25,99,800

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.