மகளிர் தொழில்முனைவோர் நலச் சங்கம் சார்பில் சென்னையில் நாளை இலவச மருத்துவ, சட்ட ஆலோசனை முகாம்

சென்னை: சென்னை கிண்டியில் உள்ள எம்.எஸ்.என்.ஏ.டி.ஐ வளாகத்தில், நாளை (அக்.7) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை மூத்த குடிமக்களுக்கான இலவச மருத்துவ மற்றும் சட்ட ஆலோசனை முகாம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்க தலைவி கிருஷ்ணா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: “தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கம் பெண்களுக்காக சேவை மனப்பான்மையுடன் தொழிற் பயிற்சி மற்றும் தொழில் தொடங்குவதற்கான அனைத்து உதவிகளையும் சேவை மனப்பான்மையுடன் செய்து வருகிறது. அதில் ஓர் அங்கமாக மூத்த குடிமக்களுக்காக வருடத்துக்கு இருமுறை மருத்துவமனை சட்ட ஆலோசனை முகாம்கள் நடத்தி வருகிறது.

இந்த முறை மூத்த குடிமக்கள் தினத்தை முன்னிட்டு மூத்த குடிமக்களுக்காக மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனை முகாம் மற்றும் கண் பரிசோதனை, கேன்சர் விழிப்புணர்வு, ஊட்டச்சத்து நிபுணரின் பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பான உணவு முறைகள் போன்றவை நாளை (அக்.7) தேதி சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கிண்டி ஜிஎஸ்டி ரோட்டில், கத்திப்பாரா பாலம் இறங்கும் இடம் அருகில் உள்ள எம்.எஸ்.என்.ஏ.டி.ஐ வளாகத்தில் நடைபெற உள்ளது.

மூத்த குடிமக்கள் தங்களது வயதுக்கு ஏற்ப எவ்வாறு தங்களது பழக்கவழக்கங்களை மாற்றிக்கொண்டு ஆரோக்கியமாக எவ்வாறு வாழ வேண்டும் என்பதை பற்றிய மருத்துவ ஆலோசனைகள் அதனைச் சார்ந்த மருத்துவ வல்லுநர் மூலம் வழிநடத்தப்படுகிறது. மேலும் சட்ட வல்லுனர்களைக் கொண்டு தங்களுக்கு தேவையான சட்ட ஆலோசனைகளும் வழங்கப்படும். இதில் கலந்துகொள்ள முன்பதிவும் செய்து கொள்ளலாம். நேரடியாக வந்தும் கலந்து கொள்ளலாம். முன்பதிவுக்கான எண்கள் 9361086551 / 9655417039 இதன் மூலம் மூத்த குடிமக்கள் மருத்துவ மற்றும் சட்ட ஆலோசனைகளை பெற்று பயன்பெறலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.