“நிகழ்நிலை காப்பு” சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மேலும் இரு மனுக்கள்
2023 ஒற்றோபர் 04 ஆம் திகதி சபாநயகரின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்ட இரண்டு மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் “நிகழ்நிலைக் காப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் இரு மனுக்களின் பிரதிகள் கௌரவ சபாநாயகர் அவர்களுக்குக் கிடைத்திருப்பதாகக் பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன் (06) சபையில் அறிவித்தார்.