இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் குறித்த நேரத்திற்குள் ஓவர் எண்ணிக்கையை வீசத் தவறியமைக்காக இலங்கை அணிக்கு கிடைத்த போட்டிப் பணத்தில் இருந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமது போட்டி பணத்தில் இருந்து 10% அபராதமாக செலுத்துமாறு போட்டியின் நடுவராக இருந்த இந்திய பிரஜை ஜவகல் ஸ்ரீநாத் உத்தரவிடப்பட்டுள்ளார்.
இலங்கை அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய போட்டியில் இலங்கை வீரர்கள் ஓவர்களை முடிக்க வேண்டிய நேரத்தில், தேவையான ஓவர்களை விட இரண்டு ஓவர்களை குறைவாக வீசியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தாமதமான ஓவருக்கும் போட்டி கட்டணத்தில் 5% அபராதம் விதிக்கப்படுவதால், இலங்கை போட்டி கட்டணத்தில் 10% செலுத்த வேண்டும்.