Yamaha Aerox – யமஹா ஏரோக்ஸ் மோட்டோ ஜிபி எடிசன் விற்பனைக்கு வெளியானது

யமஹா இந்தியா நிறுவனம், பிரசத்தி பெற்ற மேக்ஸி ஸ்டைல் கொண்ட ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரின் மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜிபி எடிசன் விலை ரூ.1,49,039 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னதாக, யமஹா மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜிபி பாடி கிராபிக்ஸ் பெற்ற YZF-R15M, MT-15 V2.0, மற்றும் ரே ZR 125 Fi ஹைப்ரிட் என மூன்று மாடல்களை வெளியிட்டிருந்த நிலையில் தற்பொழுது ஏரோக்ஸ் 155 வெளியாகியுள்ளது.

Yamaha Aerox Monster Energy MotoGP Edition

2023 ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில் சேர்க்கப்பட்டுள்ள OBD2 ஏற்ற. VVA வசதியை கொண்ட 155cc லிக்யூடு கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 13.9Nm டார்க் வழங்க 6,500rpm மற்றும் 15bhp பவர் வெளிப்படுத்த 8000rpm-ல் வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜின் CVT கியர்பாக்ஸுடன் வருகின்றது.

மான்ஸ்டர் எனர்ஜி மோட்டோ ஜிபி எடிசன் பாடி கிராபிக்ஸ் தவிர மற்றபடி எந்தவொரு மாற்றங்களும் இல்லை. ஏரோக்ஸ் 155 மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் பெற்று பிரேக்கிங் முறையில் 230 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 130 மிமீ டிரம் கொண்டு சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் 110/80-14 முன்புற டயர் மற்றும் 140/70-14 பின்புற டயர் சேர்க்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜிபி பந்தயங்களில் யமஹா நிறுவனம் பயன்படுத்துகின்ற பாடி கிராபிக்ஸ ஆனது மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

  • 2023 யமஹா மோட்டோ ஜிபி R15M – ₹ 1,97,200
  • 2023 யமஹா மோட்டோ ஜிபி MT-15 – ₹ 1,72,700
  • 2023 யமஹா மோட்டோ ஜிபி Aerox 155 – ₹ 1,49,039
  • 2023 யமஹா மோட்டோ ஜிபி  Ray ZR 125 – ₹ 92,330

(அனைத்து விலைகளும், எக்ஸ்-ஷோரூம்)

yamaha aerox 155  monster energy moto gp

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.