`விஜய் – லோகேஷ் கனகராஜ் சண்டைக்கு லைக்?' – சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குநர் விக்னேஷ் சிவன்

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இந்த அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ள `லியோ’ படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

அதுமட்டுமின்றி படத்தின் போஸ்டர், சிங்கிள் என எது வெளியானாலும் அதையொட்டிய அதீத கற்பனை நிறைந்த வதந்திகளும் சமூக வலைதளங்களில் தீயாய் பரவிய வண்ணமிருக்கிறது. அப்படி, தீயாய் பரவிய பல வதந்திகளில் ஒன்று, ‘லோகேஷுக்கும் நடிகர் விஜய்க்கும் படப்பிடிப்பின் கடைசிக் கட்டத்தில் பிரச்னை. அதனால், லோகேஷ் தன் ட்விட்டர் பயோவில் தனது படங்களின் பட்டியலிலிருந்து ‘லியோ’ படத்தின் பெயரை நீக்கிவிட்டார்’ என்றெல்லாம் சமூக வலைதளங்களில் வைரலானது.

விஜய்யுடன் லோகேஷ் கனகராஜ்

இந்நிலையில் ‘லியோ’ படத்தின் புரோமோஷனுக்கான நேர்காணல்களைக் கொடுத்து வரும் லோகேஷ் கனகராஜ், இந்த விவகாரத்தைப் பற்றிப் பேசுகையில், “அந்த வதந்தியைப் பார்த்து நானும், விஜய் சாரும் சிரிச்சுட்டு இருந்தோம். அது வதந்திதான், எல்லா வதந்திக்கும் விளக்கம் கொடுத்தால் வேலைப் பார்க்க முடியாது. அதனால், அந்தப் பிரச்னையை சிரிச்சிட்டேவிட்டுட்டோம்” என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில் நெட்டிசன் ஒருவர், ‘விஜய்க்கும் லோகேஷுக்கும் பிரச்னை நடந்தது உண்மைதான். எங்களுக்கு எல்லாம் தெரியும்’ என்பதுபோல ட்வீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

அந்தப் பதிவிற்கு இயக்குநர் விக்னேஷ் சிவன் லைக்கும் போட்டு, பின் நீக்கியுள்ளார். இதை அந்த நெட்டிசன் ஸ்கீரின் ஷாட் எடுத்து ‘விக்னேஷ் சிவனும் உண்மை என்று அறிந்து கொண்டுதான், என்னுடைய பதிவிற்கு லைக் போட்டிருக்கிறார்’ என்று குறிப்பிடுவதுபோல் மீண்டும் ஒரு டீவிட்டை இது தொடர்பாகப் பதிவிட்டிருந்தார். இதுவும் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் இதற்கு விளக்கமளித்து ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன், “அன்பான விஜய் சார் ரசிகர்களே, லோகி ரசிகர்களே… குழப்பத்திற்கு மன்னிக்கவும். லோகேஷ் சாரின் படைப்புகள், பணிகள், நேர்காணல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால், இந்த ட்வீட்டில் இருக்கும் பதிவைப் படிக்காமலே லோகேஷின் நேர்காணலை மட்டும் பார்த்துவிட்டு லைக் போட்டுவிட்டேன்” என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், “வீடியோவையும், அப்பதிவில் எழுதப்பட்டிருப்பதையும் சரியாகக் கவனிக்காமல் லைக் போட்டது என் தவறுதான். கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டும், மன்னிக்கவும். இது எனது தவறு! இதற்காக உலகம் முழுவதும் உள்ள அனைத்து தளபதி ரசிகர்களிடமும் எனது மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனிமேல், நான் செய்த இந்தத் தவற்றைப் பற்றி மேலும் மேலும் கருத்து தெரிவிப்பதில் உங்கள் நேரத்தை வீணடிப்பதை நிறுத்துங்கள். ‘லியோ’ மற்றும் படம் தொடர்பான அனைத்தையும் கொண்டாடத் தொடங்குவோம்! அக்டோபர் 19-ம் தேதி இந்த பிளாக்பஸ்டர் படத்தைப் பார்க்க உற்சாகத்துடன் நானும் உங்களுடன் காத்திருக்கிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.