பாட்னா: பிஹார் மாநிலத்தில் ஆறு, குளங் களில் புனித நீராடியபோது நீரில் மூழ்கி 22 பேர் உயிரிழந்தனர்.
பிஹார் மாநிலத்தில் ஜிவித்புத்ரிகா விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஆறுகள், குளங்களில் பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். தங்களது குழந்தைகள் ஆரோக்யமாகவும், நீண்ட நாள் வாழ்வதற்காகவும் இந்த விழாவை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் நேற்றுநடைபெற்ற புனித நீராடலின்போது வெவ்வேறு இடங்களில் 22 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
போஜ்பூரில் 5, ஜெஹானாபாதில் 4 பேர், பாட்னா, ரோஹ்டாஸ் பகுதிகளில் தலா 3 பேர், தர்பாங்கா, நவாடாவில் தலா 2 பேர், கைமர், மாதேப்புரா,அவுரங்காபாதில் தலா ஒருவர்என மொத்தம் 22 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வர் நிதீஷ் குமார் இரங்கல்தெரிவித் துள்ளார். மேலும் அவர்களது குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.