"20 கோடி ரூபா பட்ஜெட் படத்தை மிஸ் பண்ணி; 100 கோடி ரூபா பட்ஜெட்ல நடிக்கிறேன்"- ராகவா லாரன்ஸ்

கடந்த 2014 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் ‘ஜிகர்தண்டா’ திரைப்படம் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்றது.

அத்திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘ஜிகர்தண்டா – டபுள் எக்ஸ்’ ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, நிமிஷா சஜயன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பங்கு பெற்றனர். இந்த நிகழ்வில் பேசிய நடிகர் எஸ்.ஜே.சூர்யா ,” என்னோட செகண்ட் இன்னிங்ஸ் ‘இறைவி’ படத்துலதான் தொடங்குச்சு. அதுக்கு காரணம் கார்த்திக் சுப்புராஜ் சார்தான் ” எனப் பேசியவர் படக்குழுவினருக்கு வாழ்த்துகளைக் கூறி விடைபெற்றார். இதனைத் தொடர்ந்து மேடையேறிய நடிகர் ராகவா லாரன்ஸ் ,” ஜிகர்தண்டா -1ல சேது கதாபாத்திரம் நான்தான் பண்ணவேண்டியது. இந்த படத்தை தியேட்டர்ல பார்த்ததும் நல்ல படத்தை மிஸ் பண்ணிட்டோம்ன்னு பீல் பண்ணேன். டி.வில படத்தை போட்டாகூட மிஸ் பண்ண பீலிங் வரும்ன்னு அந்த படத்தை பார்க்க மாட்டேன். நல்ல வேளை நான் முதல் பாகத்துல நடிக்கல. அதுனாலதான் இந்த வாய்ப்பு கிடைச்சது. 20 கோடி ரூபாய் பட்ஜெட் படத்தை மிஸ் பண்ணதுனால இப்போ 100 கோடி ரூபாய் பட்ஜெட்ல ஒரு படம் கிடைச்சிருக்கு.

லாரன்ஸ்

ஷூட்டிங் ஸ்பாட்ல நானும் எஸ்.ஜே.சூர்யா சாரும் எங்களுக்குள்ள இருக்குற இயக்குநரை வெளிக்கொண்டு வந்து இப்படிலாம் பண்ணலாம்ன்னு பிளான் பண்ணி வச்சிருப்போம். ஆனா, கார்த்திக் சுப்புராஜ் இதெல்லாம் வேண்டாம். இதையே பண்ணுங்கன்னு சொல்லிடுவாரு. எஸ். ஜே சூர்யா சார் சிவகார்த்திகேயன், விஷால்கூட நடிச்சு ஹிட் கொடுத்துட்டாரு. இப்போ என்கூட ஹிட் கொடுக்க போறாரு. என்னோட ரசிகர்கள் எல்லோரும் ‘எங்களை இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு எல்லாம் கூப்பிட மாட்டேங்குறீங்க’ன்னு பீல் பண்ணாங்க. நான் உங்களைக் கூப்பிடமாட்டேன். இப்போ நீங்க ஒரு விழாவுக்குத் தயாராகி வந்தா எவ்ளோ செலவு ஆகும்ன்னு எனக்கு தெரியும். அதெல்லாம் வேண்டாம். உங்களோட பணத்தை வச்சுதான் நீங்க படத்தை பார்க்குறீங்க, அதுதான் விநியோகஸ்தர், தயாரிப்பாளர் மூலமாக என் பாக்கெட்டுக்கு வருது.” என பேசினார்.

மேலும் செய்தியாளர்களின் கேள்விக்கும் படக்குழுவினர் பதிலளித்தனர். இதில் கார்த்திக் சுப்புராஜ் பற்றிய கேள்விக்கு பதிலளித்த லாரன்ஸ் ,” வசனத்துல மட்டுமில்ல, என்கிட்ட நடனங்களையும் சில மாற்றங்களைச் சொல்லுவாரு.” என்றார். இதற்கு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்,” இல்ல, அந்தக் கதாபாத்திரம் நடனத்துலயும் ரொம்ப பெர்ஃபெக்டா இருக்கக்கூடாது. அந்த கதாபாத்திரத்தோட தன்மைக்கு அது தேவைப்பட்டுச்சு.” எனக் கூறினார். இதனைத் தொடர்ந்து லாரன்ஸ் ,” நானே உங்களைத் தேடி உங்க ஊர்களுக்குப் வந்து ஸ்டில்ஸ் கொடுக்குறேன். உங்களுக்காக நீங்க செலவு பண்ணுங்க. இன்னைக்கு திங்கட்கிழமை உங்க வேலையெல்லாம் விட்டுட்டு வந்துருப்பீங்க. தெய்வத்தைத் தேடி பக்தர்கள் போகுற மாதிரி உங்களைத் தேடி நானே வர்றேன்.” என்றார்.

ஜிகர்தண்டா -2 படக்குழு

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ,” இந்த படத்தோட கதாபாத்திரத்துக்கும் முதல் பாகத்தோட கதாபாத்திரத்துக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. வெஸ்டர் என்பது இட்டாலியன் ஸ்டைல கெள பாய் ( Cow Boy) மாதிரியான படம் . அதே மாதிரி இங்க எடுத்தா எப்படி இருக்கும்ன்னு ஒரு சிந்தனைலதான் ‘பாண்டிய வெஸ்டர்ன் ஸ்டோரி’ ன்னு வச்சிருக்கோம்.” எனக் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.