மும்பை: பிக் பீ, மற்றும் ஷாஹேந்ஷா என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் அமிதாப் பச்சன் இன்று தனது 81வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். சிறந்த நடிப்பாலும், கம்பீரமான குரல் வளத்தாலும் இந்தி திரையுலக ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நடிகர் அமிதாப் பச்சன். திவார், சன்சீர், சோலே மற்றும் மிஸ்டர் நட்வர்லால் உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில்