வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உலக கோப்பை லீக் சுற்றில், ஆப்கன் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) தொடரின் 13வது சீசன் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இன்று டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (அக்.,11) நடக்கும் லீக் போட்டியில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான் அணி ‘பேட்டிங்’ தேர்வுசெய்தது. இந்திய அணியில் அஸ்வின் நீக்கப்பட்டு ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார்.
முதலில் பேட்டிங் செய்த ஆப்கன் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, அந்த அணியின் ஹஸ்மதுல்லா ஷாகிதி 80, அஜமதுல்லா ஒமர்ஜாய் 72 ரன்கள் குவித்தனர்.
ரகமனுல்லா 21, இப்ராகிம் 22, ரஹ்மத் ஷா 16,, முகமது நபி 19
நஜிபுல்லா 2, ரஷீத் கான் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.
இந்திய அணியின் பும்ரா 4, ஹர்திக் பாண்டியா 2 விக்கெட் வீழ்த்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement