Leo: "ஸ்கிரிப்ட்ல இல்லாத சண்டைக் காட்சியை ஷூட் பண்ணிய போது!" – 'லியோ' ரைட்டர் ரத்னகுமார்

‘மேயாத மான்’, ‘ஆடை’, ‘குலு குலு’ படங்களின் இயக்குநரான ரத்ன குமார், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ படங்களின் எழுத்தாக்கத்திலும் பங்களித்திருக்கிறார். அவரைச் சந்தித்து ‘லியோ’ படம் குறித்தும் அவர் இயக்கிய படங்கள் குறித்தும் உரையாடியதிலிருந்து… 

‘மாஸ்டர்’ படத்தோட இன்டர்வல் சீன்ல விஜய்யின் ஐகானிக் மொமென்ட்டான ‘ஐயம் வெயிட்டிங்’ சீனை ரீ கிரியேட் பண்ணியிருப்பீங்க. அப்படி ‘லியோ’ல எதாவது ட்ரை பண்ணியிருக்கீங்களா..?

லியோ

” ‘மாஸ்டர்’ படம் பண்ணும் போது லோகேஷ் அந்த இன்டர்வல் சீனை எங்களுக்கு சொன்னப்போ, ‘இது அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில ஐயம் வெயிட்டிங்ல வந்து நிக்கும்’னு சொன்னேன். அப்போ உடனே லோகேஷ், ‘சூப்பர். அப்போ அதை சேது அண்ணாவைச் சொல்ல வைக்கலாம். அது இன்னும் வில்லத்தனமா இருக்கும்’னு சொன்னார். அப்படித்தான் ‘மாஸ்டர்’ படத்தோட இன்டர்வல் சீனை எழுதுனோம். ஆனால், ‘லியோ’வைப் பொறுத்தவரைக்கும் லோகேஷ் கனகராஜ் அஞ்சு வருஷத்துக்கு முன்னாடியே இந்த கதையை எழுதிட்டார். ஸ்கிரிப்ட்டாகவே தேவையான இடத்துக்கு ஏற்ற மாதிரி சீன்ஸ் இருந்துச்சு. அதுனால எதையும் புதுசா சேர்க்க முடியலை. ஆனால், விஜய் சாரும் த்ரிஷா மேடமும் ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் சேர்ந்து நடிக்கிறனால, அவங்களைப் பார்த்ததும் ரசிகர்களுக்கு நிச்சயமா ‘கில்லி’ படம் ஞாபகத்துக்கு வரும். அதுனால, காஷ்மீர் போர்ஷனில் வர விஜய் சார் கேரக்டர் ‘கில்லி’ படத்துல விஜய் சார் நடிச்ச கேரக்டரோட தொடர்ச்சியா இருக்கிற மாதிரி தான் காட்சிகள் இருக்கும்.”

‘மாஸ்டர்’ படத்துக்கு டீசர் வந்துச்சு, டிரெய்லர் வரலை; ‘லியோ’ படத்துக்கு டீசர் வராமலேயே டிரெய்லர் வந்துருச்சு. இது திட்டமிட்டது தானா..?

ரத்னகுமார், விஜய்

” ‘லியோ’ படத்துக்கு ஆடியோ லான்ச் நடந்திருந்தால் டீசர், டிரெய்லர்னு ப்ளான் பண்ணியிருப்பாங்கனு நினைக்கிறேன். ஆனால், அது நடக்காதனால ரசிகர்களை திருப்தி படுத்துற மாதிரியும்; படத்தோட பிரமாண்டத்தைக் காட்ற மாதிரியும் ஒரு விஷயம் பண்ணனும்னு ப்ளான் பண்ணுனது தான் இது. இதை டிரெய்லர்னு ஒரு வார்த்தைக்குள்ள அடக்கிட முடியாது. எல்லா விஷயத்தையும் பக்காவாக சொல்ற ஒரு பேக்கேஜாக இதை கட் பண்ணியிருக்காங்க. இதுக்கான வரவேற்பைப் பார்க்கும்போது அதை சரியா பண்ணியிருக்கோம்னு தோணுது. டிரெய்லரைப் பார்த்தே பல பேருக்கு பல கதைகள் தோணியிருக்கு. உங்களுக்கு எவ்வளவு கதை தோணினாலும், அதையும் தாண்டி சர்ப்ரைஸ் தரக்கூடிய பல விஷயங்கள் படத்துக்குள்ள இருக்கு.”

ஸ்கிரிப்ட்டில் இல்லாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் தோன்றிய ஐடியாக்கள் இருக்கா..?

லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார்

” ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’னு ரெண்டு படத்திலேயும் மிக முக்கியமான காட்சிகள் ஸ்பாட்டில் வந்த ஐடியா தான். ‘மாஸ்டர்’ இன்டர்வல் காட்சியில் விஜய் சார் அந்த பசங்க எழுதிய லெட்டரை படிச்சிட்டு இருப்பார். அப்போ அதை கிழித்ததும் அங்க ஒரு சண்டை வரும். அது முடிஞ்சதுக்கு அப்பறம் சேது அண்ணாகிட்ட பேசுறது தான் இன்டர்வல் சீனாக இருந்தது. அப்போ சேது அண்ணா வேற ஒரு முக்கியமான போன் காலுக்காக காத்திருப்பார். அந்த சமயம் விஜய் அண்ணாகிட்ட இருந்து போன் வருதுன்னு தான் சீன் எழுதியிருந்தோம். ஆனால், ஸ்பாட்டில் தான் விஜய் சார் அந்த பக்கம் சண்டை போட்டுட்டு இருக்கிற மாதிரி சேது அண்ணாவும் இந்தப் பக்கம் சண்டை போட்டுட்டு இருக்கிற மாதிரி மாத்துவோம்னு தோணுச்சு. இந்த ஐடியா இன்டர்வல் சீனுக்கு நல்லா வொர்க் அவுட்டும் ஆச்சு. அதே மாதிரி ‘விக்ரம்’ படத்துல கமல் சார் அந்தக் குழந்தைக்காக பால் டப்பாவை எடுக்கிறதுக்கு மறுபடியும் வீட்டுக்குள்ள போறது ஸ்கிரிப்ட்டில் இல்லை. முதலில் சத்தம் வராமல் சண்டை போட்டு அந்த குழந்தையை தூக்கிட்டு காரில் கிளம்புறது தான் சீன். ஆனால், ஸ்பாட்டில் பால் டப்பாவை எடுக்கிறதுக்கு மறுபடியும் உள்ளுக்குள்ள போனால் நல்லா இருக்கும்னு தோணுச்சு. அதுக்கு பின்னணி இசையாக அனிருத் ‘போர் கண்ட சிங்கம்’ பாட்டோட வேற ஒரு வெர்ஷன் போட்டுக் கொடுத்தார். அது இன்னும் அந்த சீனுக்கு ஹைப் கொடுத்துச்சு. இப்படி பல சீன்களுக்கு ஸ்பாட்டில் ஐடியா வந்து பண்ணியிருக்கோம்.”

‘மேயாத மான்’, ‘ஆடை’, ‘குலு குலு’னு நீங்க இயக்குன மூணு படங்களுமே வேற வேற ஜானர்ல இருக்கும். ஆடியன்ஸுக்கு நீங்க எப்படிப்பட்ட இயக்குநராக இருக்கணும்னு நினைக்கிறீங்க..?

“எனக்குனு ஒரு அடையாளமே வேணாம்னு நினைக்கிறேன். ‘மேயாத மான்’ வந்ததுக்கு அப்பறமே நிறைய பேர் அதே டைப்ல படங்கள் பண்ணச் சொல்லி கேட்டாங்க. இப்போதும் ‘மேயாத மான்’ டைப்ல எதாவது ஒரு படம் வந்தால், ‘உங்க பலம் இதுதான். அதை திரும்பப் பண்ணுங்க’னு சொல்றாங்க. எனக்கு ‘மேயாத மான்’ படத்தை என் முதல் படமாக பண்ணணும்கிற ஐடியாவே இல்லை. ‘மது’ங்கிற ஒரு குறும்படம் எடுத்திட்டு அதைக் காட்டி சில தயாரிப்பாளர்கிட்ட என் முதல் பட கதையை சொன்னேன். என் முதல் படமாக ஒரு க்ரைம் த்ரில்லர் கதையை தான் நான் பண்ணியிருந்தேன். கதை கேட்ட எல்லாரும், ‘சூப்பராக இருக்கு. ஆனால், ஏன் முதல் படத்திலேயே ரொம்ப கஷ்டப்படணும்னு நினைக்கிறீங்க. நீங்க காட்டுன அந்த குறும்படம் போனதே தெரியலை. அதையே படமாக பண்ணுங்க’னு சொல்லுவாங்க. இப்படியே 2 வருஷம் நான் சந்திக்கிற 50 தயாரிப்பாளர்களும் சொன்னாங்க. சரி, அதையே பண்ணிடுவோம்னு பண்ணுனது தான் ‘மேயாத மான்’. அதே மாதிரிதான் ‘ஆடை’, ‘குலு குலு’ படங்களும் அமைஞ்சது. இந்தபட படங்கள் எல்லாமே எனக்கு பிடிச்சுத்தான் பண்ணுனேன். ஆனால், இதுவரைக்கும் நான் பண்ணணும்னு நினைச்ச படத்தை பண்ணல.”

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.