Mini Countryman Shadow Edition – ₹ 49 லட்சத்தில் மினி கண்ட்ரிமேன் ஷேடோ எடிசன் விற்பனைக்கு வெளியானது

இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள பிஎம்டபிள்யூ குழுமத்தின் மினி கண்ட்ரிமேன் ஷேடோ எடிசன் விற்பனைக்கு ரூ.49 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும், 24 யூனிட் மட்டும் கிடைக்க உள்ளது.

பிஎம்டபிள்யூ சென்னை ஆலையில் தயாரிக்கப்பட உள்ள இந்த கார் கண்ட்ரிமேன் கூப்பர் S JCW மாடலை அடிப்பையாக கொண்டதாகும்.

Mini Countryman Shadow Edition

கண்ட்ரிமேன் ஷேடோ எடிசனில் சில்வர் இன்ஷர்ட்கள் மற்றும் பானட் ஸ்கூப்களுடன் கூடிய பளபளப்பான கருப்பு வண்ணத்தை கொண்டு சிறப்பு பாடி ஸ்டிக்கரிங் பெற்றுள்ளது. டாஷ்போர்டு சில்வர் நிறம் டான் லெதர் அப்ஹோல்ஸ்டரி கொண்டு 8.8 அங்குல தொடுதிரை, பெடல் விளக்குகள், ஆம்பியன்ட் விளக்குகள், ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவற்றைப் பெறுகிறது.

2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் கொடுக்கப்பட்டு அதிகபட்சமாக 178hp பவர் மற்றும் 280Nm டார்க் வழங்கும். இதில் 7-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.

0-100kph வேகத்தை எட்ட 7.5 வினாடிகளில் செல்ல முடியும் என்றும், இந்த காரின் அதிகபட்ச வேகம் 225kph ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

Mini Countryman Shadow Edition

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.