சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி என்பவற்றின் வருடாந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக மொறோக்கோவிற்குச் சென்ற நிதி இராஜாங்க அமைச்சர் ஷெகான் சேமசிங்க மற்றும் உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஷ்வரன் அய்யரை சந்தித்து உரையாடினார்.
இதன்போது இலங்கைக்கு உதவியளிக்கும் திட்டம் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டதாகக் குறிப்பிட்டார். உலக வங்கி நாட்டின் பொருளாதார ஸ்திரத் தன்மை மற்றும் மறுசீரமைப்பை வெற்றிகொள்வதற்காக வழங்கும் ஒத்துழைப்புக்கள் குறித்து இராஜாங்க அமைச்சர் நன்றிகளைத் தெரிவித்தார்.
அத்துடன் இராஜாங்க அமைச்சர் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சுப்ரமணியத்துடனான சந்திப்பும் இடம்பெற்றது.
பொருளாதார மறுசீரமைப்புத் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் இலங்கையின் பொருளாதாரம் எதிர்கொள்ளும் சவால்கள் உட்பட தற்போதைய பொருளாதார நிலை தொடர்பாக இருவரும் தமது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்த மாநாடு ஒக்டோபர் 9ஆம் திகதி மொறோக்கோவில் ஆரம்பமானது.
இவ்வாரத்தில் பொருளாதார ஸ்தீரத் தன்மையை வலுப்படுத்துவற்கு மற்றும் நிலைபேறான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்காக எமது சகல ஆதரவாளர்களையும் சந்திப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் ஷெகா சேமசிங்க மேலும் தெரிவித்தார்.
மொறோக்கோவின் மரகேஜ் இல் எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை நடைபெறும் இம்மாநாட்டிற்காக மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.