வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இத்தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது இந்தியா.
இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 13வது சீசன் நடக்கிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. இன்று டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
‘டாஸ்’ வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. ரோகித் தலைமையிலான இந்திய அணியில் அஷ்வின் நீக்கப்பட்டு ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டார்.
ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 272 ரன் எடுத்தது. கேப்டன் ஹஷ்மதுல்லா ஷஹிதி (80), அஜ்மதுல்லா ஒமர்ஜாய் (62) அரைசதம் கடந்தனர். இந்தியா சார்பில் பும்ரா 4, ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட் கைப்பற்றினர்.
273 ரன்கள் வெற்றி இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா அதிவேக சதமடிந்த நிலையில் 131 ரன்களில் ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆட்ட நேர முடிவில் இந்தியா 35 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 273 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா எளிதாக வெற்றி பெற்றது. அரை சதம் அடித்த விராட் கோஹ்லி ஆட்டம் இறுதி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.
போட்டியின் துவக்கத்தி்ல் ஆப்கன் நிலநடுக்க சம்பவத்திற்கு இரு தரப்பு வீரர்கள் இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்
உலக கோப்பை போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன்கள் வரிசையில் (கபில்தேவ், கங்குலி) ரோஹித் சர்மா இடம் பெற்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement