Virat Kholi: சொந்த மைதானத்தை வணங்கி களமிறங்கிய விராட் – நவீன் உல்ஹக்கை கட்டித் தழுவி சமாதானம்..!

விராட் கோலி சொந்த மைதானம்

விராட் கோலி ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடி வருவதால், அவர் பெங்களூரு என்றே ரசிகர்கள் இன்றளவும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் உண்மையில் விராட் கோலியின் சொந்த ஊர் டெல்லி. பிறந்து வளர்ந்தது, கிரிக்கெட் விளையாடியது எல்லாம் டெல்லி தான். முன்பு பெரோஸா கோட்லா என அழைக்கப்பட்ட டெல்லி அருண்ஜேட்லி மைதானத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல நூறு போட்டிகள் விளையாடி இருக்கிறார். அந்த மைதானத்தில் தான் இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் களமிறங்கினார் விராட் கோலி. 

’விராட்….விராட்…’ ரசிகர்கள் ஆரவாரம்

mufaddal_vohra) October 11, 2023

அதற்கேற்ப ரசிகர்களும் விராட் கோலிக்கு உற்சாகத்தை கொடுத்துக் கொண்டே இருந்தனர். கேமரா மேனும் அடிக்கடி டெல்லியில் மைதானத்தில் விராட் கோலியின் திறமையை அங்கீகரிக்கும் விதமாக வைக்கப்பட்டிருக்கும் விராட் கோலி பெயர் வைக்கப்பட்டிருக்கும் பெவிலியன் பகுதியை அடிக்கடி காண்பித்துக் கொண்டே இருந்தனர். இதனால் வழக்கத்துக்கும் மாறாக கொஞ்சம் கூடுதலாகவே மைதானத்தில் அங்கும் இங்கும் ஓடி துருதுருவென இருந்தார் விராட் கோலி.  குறிப்பாக ஆப்கானிஸ்தான் வீரர் நவீன் உல் ஹக் பேட்டிங்கிற்காக மைதானத்திற்கு வந்தபோது விராட் கோலி என்ற ரசிகர்களின் முழக்கம் விண்ணைப் பிளந்தது. இதில் முகம் மாறிப் போனார் நவீன் உல் ஹக். 

விராட் கோலி – நவீன் உல் ஹக்

(@mufaddal_vohra) October 11, 2023

அவரால் இயல்பாக முதல் இரண்டு பந்துகள் விளையாடவே முடியவில்லை. அதன்பின்னர் ஒரு பந்தை நவீன் உல் ஹக் அடிக்க, அந்த பந்தும் ஸ்ரெய்டில் நின்று கொண்டிருந்த கோலியிடமே சென்றது. இருப்பினும் விராட் கோலி மின்னல் வேகத்தில் ஓடி பிடித்து கீப்பருக்கு வீசினார். அப்போதும் விராட் கோலி… விராட் கோலி என ரசிகர்கள் பெரும் முழக்கத்தையே எழுப்பிக் கொண்டிருந்தனர்.

மைதானத்தை வணங்கிய விராட்

CricCrazyJohns) October 11, 2023

பின்னர் இந்திய அணியின் சேஸிங்கில் இஷான் கிஷன் அவுட்டானாதும் விராட் கோலி களம் புகுந்தார். அப்போது மைதானத்தை தொட்டு வணங்கி காலடி எடுத்து வைத்தார். சொந்த மைதானத்தில் விளையாடப்போகும் கடைசி உலக கோப்பை போட்டியாக இருக்கும் என்பதால், அவர் இதனை செய்திருக்கக்கூடும். இதனையடுத்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி, ஐபில் முதல் தொடர்ச்சியாக மோதலில் ஈடுபட்டு வந்த நவீன் உல் ஹக்கை கட்டித் தழுவி, அவருடன் சமாதானத்தை ஏற்படுத்திக் கொண்டார். இது ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், விராட் கோலி என ரசிகர்கள் மீண்டும் ஆரவாரம் செய்து அவரை பாராட்டினர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.